அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்...
MLA மனோஜ் பாண்டியனின் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு; குடும்பத்தினர் காயம்; பரவும் வீடியோ;பின்னணி என்ன?
ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் முருகன் (48). இவர், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனிடம் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இசக்கி, அவருடைய சகோதரர் குமார் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் முருகன், அவரது மனைவி மாரியம்மாள், தாய் ஆவுடையம்மாள், மகன் பிரவீன் ஆகியோரை அரிவாள், கம்பு ஆகியவற்றால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த நால்வரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த காயமடைந்த முருகன், அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐந்து பேர் கொண்ட கும்பல், ஓட்டுநர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.