செய்திகள் :

MrBeast: பள்ளிக் குழந்தைகளுக்கு சொந்த செலவில் காலை உணவு வழங்கும் யூடியூபர், என்ன சொல்கிறார்?

post image

மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், அமெரிக்காவின் கேன்சஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

2012-ல் Mr Beast யூடியூப் சேனலை தொடங்கி, 2017-ல் அதிக சந்தாதாரர்கள் கொண்டு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தார். இவரது நன்கொடை வழங்குதல் மற்றும் சமூக சேவைகளுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவரது சேவை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக காலை உணவு வழங்க உள்ளார்.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சாக்லேட் பண்ணைகளில் பெருமளவில் குழந்தைகள் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, குழந்தை தொழிலாளர்களை குறைக்கும் முயற்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

Beast Philanthropy

இந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டால் அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் தடுக்கப்படும் என MrBeast முடிவு செய்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தனது நன்கொடையால் மிகவும் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட், ஆப்ரிக்காவின் பல சமூகங்களுக்கு உதவியிருக்கிறார். உதாரணமாக 2023ம் ஆண்டு, அவரது நிறுவனம் பீஸ்ட் அறக்கட்டளை, கேமரூன், கென்யா, சோமாலியா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் 100 நன்னீர் கிணறுகளை வெட்டியது.

ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனத்தை ஒட்டிய நாடுகளில் ஐந்தில் ஒரு குழந்தை 6-11 வயதில் பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையை மாற்றுவதற்காக இந்த காலை உணவு திட்டத்தை தொடங்கியதாகக் கூறியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட்.

"மேற்கு ஆப்ரிக்காவில் சாக்லேட் பண்ணைகளில் தொழிலாளர்களாக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ பள்ளிகளில் காலை உணவு வழங்க திட்டமிட்டோம். இதை செயல்படுத்திய முதல் வாரத்திலேயே பல பள்ளிகளில் வருகை 10% அதிகரித்துள்ளது." என அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Mr Beast

மேலும், "ஆப்ரிக்காவில் குழந்தை தொழிலாளர்களாக இருக்கும் குழந்தைகளை (கிட்டத்தட்ட 15 லட்சம் பேர்) எப்படி பள்ளிகளுக்கு வரவைப்பது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி சிறந்த அறிவாளிகள் உள்ளனர். அடுத்த 12 மாதங்களில் மிகப் பெரிய வளர்ச்சிகளை ஏற்படுத்தவிருக்கிறோம். என்னளவு செல்வாக்கு இருக்கும் ஒருவர் இதைச் செய்ய முடியவில்லை என்றால், யாராலும் முடியாது. நான் இதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

ஜிம்மி டொனால்ட்சனுக்கு மிஸ்டர் பீஸ்ட் கம்பனி, பீஸ்ட் இண்டஸ்ரீஸ் போன்றவை மூலம் 2025-ல் 900 மில்லியன் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

`Snickers தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்' - நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது. வாழ்க்கை எல்லாருக்கும் நாம் நினைத்தபடி அமைவதில்லை. மரணமும் அப்படியே. ஆனால் பால் ... மேலும் பார்க்க

Wolfdog: 'ஓநாயுடன் கலப்பு' - ரூ.50 கோடிக்கு அரிய வகை நாயை வாங்கிய பெங்களூரு நபர்!

உலகம் முழுவதுமே மனிதர்களிடம் பிரபலமான செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதன் மேல் அதன் உரிமையாளர்கள் கொண்டிருக்கும் அன்பும், ஒரு நல்ல நாய்க்காக அவர்கள் செய்யும் விஷயங்களும் ஆச்சர்யப்படுத்த... மேலும் பார்க்க

39 மனைவிகள், 94 குழந்தைகள்; `உலகின் மிகப்பெரிய குடும்பம்' இதுதான்!

உலகின் மிகப்பெரிய குடும்பமாக மிசோரம் இல் உள்ள ஒரு குடும்பம் அடையாளம் பெற்றுள்ளது. சியோனா சனா என்ற நபர் 39 முறை திருமணம் செய்து கொண்டு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 33 பேர ... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்பு மிக்க மும்பை பங்களாவை ரூ.276 கோடிக்கு வாங்கிய அம்பானி உறவினர் - யார் இவர்?

மும்பையில் சொத்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தென்மும்பை, பாந்த்ரா, அந்தேரி போன்ற சில பகுதியில் வீடுகளின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. மும்பையின் தென... மேலும் பார்க்க