கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!
Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி
மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்த தொட்டி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதனைச் சுத்தப்படுத்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். முதலில் ஹசிபுல் மற்றும் சியுல் ஷேக் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்கள் உள்ளே இறங்கிய பிறகு எந்த வித தகவலும் இல்லை. இதையடுத்து மேலும் இரண்டு பேர் உள்ளே இறங்கினர். அவர்களிடமிருந்தும் எந்த வித தகவலும் இல்லை.
இதையடுத்து ஐந்தாவதாக புதான் ஷேக் என்பவரைக் கயிறு கட்டி தொட்டிக்குள் இறக்கின்றனர். உள்ளே இறங்கப்பட்டதும், அவரைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த விஷவாயு தாக்க ஆரம்பித்தது. உடனே புதான் ஷேக் சத்தம் போட்டுக் கத்தியதால் அவரை வெளியில் இழுத்தனர்.

மேலே வந்தவுடன் அவர் மயக்கம் அடைந்துவிட்டார். இதையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி உள்ளே மயங்கிக் கிடந்த 4 பேரையும் வெளியில் எடுத்து வந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 4 பேரும் விஷவாயு தாக்கி இறந்திருந்தனர்.
இது குறித்து புதான் ஷேக் கூறுகையில், "ஆரம்பத்தில் தொட்டியைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். இதன் மூலம் விஷவாயு வெளியேறி இருக்கும். இரண்டு ஆண்டுகளாகத் தொட்டி மூடப்பட்டு இருந்ததால் சகதிகள் சேர்ந்து விஷவாயு உருவாகி இருக்கிறது. தொட்டிக்குள் இறங்கும்போது எந்த வித பாதுகாப்புக் கவசமும் கொடுக்கப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாகத் தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வருகிறோம். ஆனால் இது போன்று ஒருபோதும் நடந்ததில்லை'' என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 2 ஒப்பந்ததாரர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
