Nayanthara - Vignesh shivan: "ஊர் நடுவினில், ஓர் தெருவினில்..." - காதலர் தின 'டிரெண்டிங்' ரீல்ஸ்!
திரையுலகின் காதல் ஜோடிகளில் எப்போதும் பேச்சுப் பொருளாக இருப்பவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். நயன்தாராவுடனான பொழுதுகளை இன்ஸ்டாகிராமில் கொண்டாடித் தீர்க்கும் விக்னேஷ் சிவன், அவருடன் சேர்ந்து காதலர் தின ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், அவர் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் 'தீமா தீமா' என்ற பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்கள் நயன்தாராவை மனதில் வைத்தே எழுதப்பட்டது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ட்ரெண்டிங்கில் இருக்கும் தீமா தீமா பாடலுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் பதிவு
இந்த ரீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், "என் தூய்மையான தங்கத்துடனான ஒரு தசாப்தத்தைக் கடந்த தூய்மையான காதலைப் போற்றுகிறேன். லவ் யூ சோ மச் நயன்தாரா. காதலிலும் இரக்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாருக்குக் காதலர் தின வாழ்த்துகள்! ஒவ்வொரு நாளும் தூய்மையான நேர்மையான காதலை வெளிப்படுத்தும் என் மனைவிக்கு நன்றி. 3,650 நாட்களும் மேலாகக் காதலித்துக்கொண்டிருக்கிறோம்! கடவுளின் ஆசியுடன் மகிழ்ச்சியாக இந்த அன்பை நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம்." எனப் பதிவிட்டுள்ளார்.
Nayanthara கமென்ட்
இந்த பதிவின் கமென்ட்டில், "நான் என் முழு ஆன்மாவுடனும் இதயத்துடனும் உன்னைக் காதலிக்கிறேன் உயிரே" எனப் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play