செய்திகள் :

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

post image

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

அர்சு ராணா தியூபா தற்போதைய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டுவில் புதனில்கந்தா என்ற பகுதியில் உள்ள இவர்களின் வீட்டுக்குள் ஆர்பாட்டக்காரர்கள் அத்துமீறியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில், தாக்குதல்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமரின் முகத்தில் ரத்தம் வருவது தெரிகிறது. அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக ராணுவம் அங்கு செல்வதற்கு முன்னர் அவர்கள் வீடு சூறையாடப்பட்டிருந்தது.

காத்மண்டுவிலும் நாட்டின் பிறப் பகுதிகளிலும் கலவரக்காரர்கள் நாசகர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் வீடுகள், அரசு அலுவலகங்கள், ஊடக, கட்சி அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் ஆகியவற்றை தீயிட்டு எரித்துள்ளனர்.

Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence
Nepal Violence

நேபாளத்தில் சமூக வலைதளங்களை முடக்கியது போராட்டம் வெடிக்க காரணமானது. "சமூக ஊடகங்களை அல்ல; ஊழலை நிறுத்துங்கள்" என்றும் கோஷமிட்டனர். போராட்டத்தை அடக்கும் நோக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது போராட்டம் கலவரமாக வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது.

வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. 

முன்னதாக நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தப்பித்து ஓடும் காட்சிகள் பரவி வந்தன. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். பல அரசியல் தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கின்றன.

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெ... மேலும் பார்க்க

Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அமெரிக்கா கண்டனம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீ... மேலும் பார்க்க

அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக... மேலும் பார்க்க

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க