செய்திகள் :

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" - சீமான் மீது தமிழரசன் காட்டம்

post image
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பயணத்திலிருந்தபோதும் கட்சித் தொடங்கிய நாட்களிலிருந்து 15 ஆண்டுகளாக தற்போது வரை, கட்சிக்கான களங்களில், மக்களுக்கான தளங்களில், இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ்த்தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றன.

சீமான்

எதைச் சொல்லுவது? மதவாத அரசியலை எதிர்ப்பதாகக் கூறுகின்ற தாங்கள், பா.ஜ.க மனிதக் குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவைப் பேரறிஞர் என்று சொல்வதையா? தமிழிசை 'சீமான் எங்கள் தீம் பார்ட்னர்' என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா!?

திருமாவளவனை அண்ணன் என்று கூறிக்கொண்டே நாம் தமிழர் கட்சி மேடையில், மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும் போதும் கேலி பேசும் போதும், தாங்கள் கைதட்டிச் சிரித்து மகிழ்வதையா?

தவெக விஜய் - பரந்தூர்

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிற போது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்துச் செத்துவிடுவாய் என்று பேசியதையா? தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது 'சங்கி' என்றால் செருப்பால் அடிப்பேன் என்று செருப்பைக் காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்த பிறகு, 'சங்கி என்றால் சக தோழன்' என்று சொல்வதையா? இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது?

மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத்தான் இப்படிப் பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் நங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், 'பிசிறு' என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை இழிவாகப் பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழரசன், சீமான்

இப்படி இன்னும் எத்தனையோ..! இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ்த்தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கிப் பயணப்படும் பா.ஜ.க-விடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படிப் பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைகொட்டிச் சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள். தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது.

தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி, நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும், பிரபாகரனிசத்தைச் சிதைத்து, சீமானிசத்தை விதைத்து. கட்சியை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறீர்கள்" என்று சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க