செய்திகள் :

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என இந்திய விமான படை எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operation Sindoor
Operation Sindoor

இது குறித்த பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளது. ராணுவ ஒழுங்குடனும் துல்லியமாகவும் பணியாற்றியுள்ளோம் (precision and professionalism)." எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், "நாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப, திட்டமிட்டு விவேகமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

(ராணுவ) நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதனால் விரிவான விளக்கங்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படும். யாரும் யூகங்களையும் சரிபார்க்கப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என ராணுவம் கேட்டுக்கொள்கிறது" என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் சம்பவத்துக்கு எதிர்வினையாக, மே 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது ஆபரேஷன் சிந்தூர்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை, இரண்டு நாடுகளும் உறுதிப்படுத்தியிருந்தாலும் பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) முழுமையாக முடிவடையும் வரை இந்திய விமானப்படை எச்சரிக்கையாகவே இருக்கும் என சி.என்.பி.சி.டி.வி செய்தி தள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க

"தாக்குதலின் போது பாகிஸ்தான் செய்தது மிகப்பெரிய தவறு..." - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்... மேலும் பார்க்க