Pahalgam Attack: ``நீதி வழங்கப்படும்'' - சச்சின், விராட், கம்பீர்... கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத நடவடிக்கைக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலால் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். நம்பிக்கையாகவும் மனித நேயத்துடனும் ஒற்றுமையாக நிற்போம்" என எழுதியுள்ளார்.
Deeply saddened by the attack on tourists in Pahalgam. Praying for the victims and for the strength of their families Let us stand united in hope and humanity. #PahalgamTerroristAttack
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 22, 2025
முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், "ஒவ்வொருமுறை அப்பாவி உயிர் பறிபோகும் போதும் மனிதம் தோற்கிறது. காஷ்மீரில் நடந்ததைக் குறித்துக் கேட்டபோது மனம் நொறுங்கிவிட்டது. நான் இரண்டு தினங்களுக்கு முன்புதான் அங்கு இருந்தேன். இந்த வலி மிக நெருக்கமானதாக இருக்கிறது." எனப் பதிவிட்டுள்ளார்.
Every time an innocent life is lost, humanity loses. It’s heartbreaking to see and hear about what happened in Kashmir today. I was just there couple of days ago — this pain feels too close.
— Irfan Pathan (@IrfanPathan) April 22, 2025
முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக், "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடந்த கண்டிக்கத்தக்க தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்" என எழுதியிருக்கிறார்.
Deeply pained to hear of the reprehensible terrorist attack on innocent tourists in #Pahalgam .
— Virrender Sehwag (@virendersehwag) April 22, 2025
My heart goes out to those who have lost their loved ones. Prayers for the injured
இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், "பஹல்காமில் நடந்த தாக்குதலைப் பற்றி கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் பிரார்த்தனைகள். இதுபோன்ற வன்முறைகளுக்கு நம் நாட்டில் இடமில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், "காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி கேள்விப்பட்டு மனம் உடைந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. அமைதி மற்றும் வலிமைக்காக பிரார்த்திக்கிறேன்," என எழுதியுள்ளார்.
Heartbreaking to hear about the terrorist attack in Kashmir. My thoughts are with the families of the victims. Praying for peace and strength.
— K L Rahul (@klrahul) April 22, 2025
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். இதற்கு பொறுப்பானவர்கள் விலை கொடுக்க வேண்டும். இந்தியா தாக்கும்" என எழுதியுள்ளார்.
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான துயரமான தாக்குதல்களால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோதனையைச் சந்தித்துள்ளன. உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து நீதிக்காக பிரார்த்தனை செய்யும் இந்த இருண்ட நேரத்தில் இந்தியாவும் மொத்த உலகமும் அவர்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றன." எனப் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைதியும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையும் சென்றடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இந்த கொடூர நடவடிக்கைக்கு நீதி வழங்கப்படும்" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
