Paridhabangal: "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமை" - சீமான் காட்டம்
நாம் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் குறையும் என வதந்திகளைப் பரப்புகின்றனர்.
செத்து சாம்பல் ஆனாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். நான் மக்களுக்கானவன், என் வெற்றியும், தோல்வியும் மக்களுக்கானது" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கோபி, சுதாகர் மீதான வழக்குப்பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "படிக்கின்ற பிள்ளைகளின் பைக்குள் அரிவாள் இருக்கிறது என்றால் பயமாக இருக்கிறது. ஒரு தலைமுறை இவ்வளவு நஞ்சாக வளர்கிறது என்று நடுக்கமாக இருக்கிறது.
கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையைக் காட்டுகிறது. சமூகத்தின் சாதியக் கொடுமையைக் காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் இருக்கக்கூடாது.
தமிழர்களுக்கு மொழி, இனம், வரலாறு, தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலாசாரம் என இதில்தான் பெருமை இருக்க வேண்டும். சாதி, மதத்தில் பெருமை இருக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.