Parvati Nair: `அன்று பேசத் தொடங்கினோம்' - தொழிலதிபரை மணக்கும் பார்வதி நாயர்
நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ஆஷ்ரித்தை தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்தேன். அன்று பேசத் தொடங்கினோம். ஆனால், உண்மையில் நெருங்கி வர சில மாதங்கள் எடுத்துக் கொண்டது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் சம்மதத்துடன் மலையாள மற்றும் தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறும்.
பிப்ரவரி 6-ம் தேதி ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட சடங்குகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும். கேரளாவில் திருமண வரவேற்பு நடத்த முடிவு செய்திருக்கிறோம்” என்று பார்வதி நாயர் தெரிவித்திருக்கிறார்.