தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
PBKS vs CSK : தோல்வியைத் தவிர்க்க இந்த 3 விஷயத்தை செய்யுங்க CSK - Analysis
'சென்னை செய்ய வேண்டிய 3 விஷயஙகள்!'
சென்னை அணி இன்று பஞ்சாபை எதிர்கொள்கிறது. ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகான போட்டி இது. இந்தப் போட்டியிலாவது வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி செய்தே ஆகவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே.

ஓப்பனராக ருத்துராஜ்:
வம்படியாக நம்பர் 3 இல் இறங்கிக் கொண்டிருக்கிறார் ருத்துராஜ். அவருக்கு மட்டுமல்ல அணிக்குமே 100% ஏதுவானது அவர் ஓப்பனிங் இறங்குவதுதான். 2023 சீசனில் ஓப்பனிங்கில் 600+ ரன்களை அடித்திருந்தார். கடந்த சீசனிலும் 600 க்கும் நெருக்கமான ரன்களை அடித்திருந்தார்.
ஓப்பனிங்கில் இறங்கி கொஞ்சம் நின்று நிதானமாக ஆடி மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வந்தவுடன் அவர்களை அட்டாக் செய்து பெரிய ஸ்கோருக்கு செல்வார். இதுதான் ருத்துராஜின் ஸ்டைல். இப்போது ஓப்பனர்களாக ரச்சின் - கான்வே/ திரிபாதி இறங்குகிறார்கள். 2-3 ஓவர்கள் கூட ஓப்பனிங் கூட்டணி தாக்குப்பிடிப்பதில்லை. சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி விடுகிறார்கள்.

இதனால் ஓப்பனிங்கில் ஒரு மொமண்டமே கிடைப்பதில்லை. ஓப்பனிங் மொமண்டமே கிடைக்காமல்தான் 2020 சீசனை சென்னை அணி மட்டமாக இழந்திருக்கும். இப்போதும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் ருத்துராஜ் தன்னுடைய பிடிவாதங்களையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு ஓப்பனிங் இறங்க வேண்டும். அவரும் கான்வேயும் ஓப்பனிங் இறங்க, ரச்சின் நம்பர் 3 இல் வர வேண்டும். இது மட்டுமே சென்னை அணியை காப்பாற்ற உதவும். ஏனெனில், ஆரம்பத்தில் மொமண்டம் கிடைக்கவில்லையெனில், இந்த பேட்டிங் ஆர்டரில் எங்கேயுமே மொமண்டம் கிடைப்பதில்லை. அதனால்தான் 170+ டார்கெட்களை சென்னை அணியால் சேஸ் செய்ய முடியவில்லை.
சிவம் துபேவின் பார்ம் :
2023 சீசனை சென்னை வென்றதற்கும், கடந்த சீசனில் ஓரளவுக்கு நன்றாக ஆடியதற்கும் சிவம் துபேதான் மிக முக்கிய காரணம். ஓப்பனர்கள் ஓரளவுக்கு நன்றாக ஆடி கொடுக்க மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வந்தவுடன் சிவம் துபே வந்துவிடுவார். பாரபட்சமே இல்லாமல் அதிரடியாக பெரிய சிக்சர்களை அடித்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுப்பார்.

கடைசியில் ஜடேஜா, தோனி ஆகியோர் டெத் ஓவர்களை பார்த்துக் கொள்வார்கள். இதுதான் சென்னையின் பேட்டர்ன். அதில் எதுவுமே இந்த முறை ஒர்க் அவுட் ஆகவில்லை. ஓப்பனிங்கில் கோட்டைவிட்டாலும் மிடில் ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக ஆடியிருந்தாலே சென்னை அணி தோற்ற 3 போட்டிகளையும் வென்றிருக்க முடியும். மிடில் ஓவர்களில் ரன் ரேட் சுணங்காமல் இருக்க சிவம் துபே பழையபடியே நன்றாக ஆடியே ஆக வேண்டும்.
லெவனில் மாற்றங்கள்:
ப்ளேயிங் லெவனிலும் குறிப்பாக இரண்டு மாற்றங்களை சென்னை அணி செய்தாக வேண்டும். கடந்த போட்டியில் கலீல் அஹமது இருக்கையிலேயே இன்னொரு இடதுகை பௌலராக முகேஷ் சௌத்ரியை கொண்டு வந்தார்கள். அது செட் ஆகவில்லை. பௌலிங்கில் அரைசதம் அடித்துவிட்டு சென்றார். ஒரு வேரியேஷனுக்காக வலது கை வேகப்பந்து வீச்சாளரான அன்ஷூல் கம்போஜை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

அதேமாதிரி, மிடிலில் விஜய் சங்கருக்கு பதில் இண்டண்ட்டோடு ஆடக்கூடிய இளம் வீரர்களான ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி ஆகியோரை முயற்சி செய்து பார்க்கலாம். எதுவும் மோசமாகிவிடாது. இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இண்டண்டோடாவது ஆடுவார்கள்.
CSK இன்றைக்கு செய்யவேண்டிய மாற்றம் என்ன என நீங்கள் நினைப்பதைக் கமென்ட் செய்யுங்கள்