செய்திகள் :

PBKS vs LSG: `ஆரம்பத்தில் அதைக் கணிக்கத் தவறிவிட்டேன்; பின்னர்தான்...’ - ஆட்ட நாயகன் ப்ரப்சிம்ரன்

post image

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 237 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய லக்னோ அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

PBKS vs LSG - ப்ரப்சிம்ரன்
PBKS vs LSG - ப்ரப்சிம்ரன்

இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற, அந்த அணியில் 91 ரன்கள் அடித்த ப்ரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருது வென்றார். புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் ப்ரப்சிம்ரன், "இதுவொரு நல்ல இன்னிங்ஸ். வெற்றிக்கு காரணமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு 2 புள்ளிகளும் முக்கியம். கேட்சிலிருந்து தப்பித்தபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன்.

PBKS vs LSG - ப்ரப்சிம்ரன் - ஸ்ரேயஸ் ஐயர்
PBKS vs LSG - ப்ரப்சிம்ரன் - ஸ்ரேயஸ் ஐயர்

ஆரம்பத்தில் பிட்ச்சைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன். அதற்கு சிறுது நேரமானது. பின்னர் 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் பேட்டிங் யூனிட்டிலிருந்து சேர்ந்த ஒருவர் சிறப்பாக வருகிறார்" என்று கூறினார்.

PBKS vs LSG: Catches win the Matches; பூரானின் அந்த மிஸ்டேக்; பஞ்சாப் பயன்படுத்திக்கொண்டது எப்படி?

தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும்... மேலும் பார்க்க

Jio Star : 'அடுத்த மூன்றாண்டுகளில் 83,000 கோடி முதலீடு!' - ஜியோ ஸ்டாரின் திட்டம் என்ன?

ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 83,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்தியாவில் யூடியூப் செய்திருக்கு... மேலும் பார்க்க

PBKS vs LSG: "இன்னும் நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயம்..." - வெற்றிக்குப் பின் ஸ்ரேயஸ்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

'பீகார் மண்ணின் மகன் சிறப்பாக விளையாடி வருகிறார்; இளம் வயதில்...' - சூர்யவன்ஷியைப் பாராட்டிய மோடி

நேற்று( மே 4) ‘கேலோ இந்தியா’ போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகி... மேலும் பார்க்க

PBKS vs LSG: `எப்போதும் டாப் ஆர்டரையே நம்பிக்கொண்டிருக்க முடியாது' -தோல்விக்குப் பின் பண்ட் விரக்தி

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

CSK: 'வெற்றியோ, தோல்வியோ... கர்ஜித்துக்கொண்டே இருங்கள்'- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. cskவெறும் இ... மேலும் பார்க்க