ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர...
PM Modi: ``அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்...'' - மகிழ்ச்சியை பகிர்ந்த மோடி
'அரபு மொழியில் ராமயணம் மற்றும் மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த மொழிபெயர்ப்பு உலக அளவில் இந்திய கலாச்சாரத்தின் புகழை பறைசாற்றுகிறது' என்று கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
குவைத்தைச் சேர்ந்த அப்துல்லா அல் பரோன் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிப்பெயர்ந்திருந்தார். அந்த மொழிப்பெயர்ப்பை அந்த நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர் அப்துல் லத்தீப் அல் நெசப் வெளியிட்டிருந்தார்.
இந்த நூல்கள் குறித்து சமீபத்தில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மோடி பகிர்ந்திருந்தார். தற்போது, குவைத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி, அப்துல்லா அல் பரோன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் ஆகிய இருவரையும் சந்தித்தார்.
அப்போது, நெசப்பிடம் இந்த புத்தகத்தை மொழிபெயர்க்க எத்தனை ஆண்டுகள் ஆனது என மோடி கேட்க, அதற்கு அவர், 'இரண்டு ஆண்டுகள் எட்டு மாதம் ஆனது' என்று பதிலளித்துள்ளார்.
மேலும், மோடி அரபு மொழி ராமாயணம் மற்றும் மகாபாரதம் பிரதியில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.
அப்துல்லா அல் பரோன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் இதுவரை உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட புத்தகம் மற்றும் புனித நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.