செய்திகள் :

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' - அன்புமணி திட்டவட்டம்

post image

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், " கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது.

அன்புமணி - ராமதாஸ்

நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குழப்பங்களுக்கு முடிவு கட்டுவேன். ராமதாஸ் அய்யா கொள்கைத் தலைவர். அவரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்.

அவர் நமக்கான வழிகாட்டி. நான் தான் கட்சியின் தலைவர். விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வேலையை பார்க்க வேண்டும். தூசியை தட்டுவதைப் போல விமர்சனங்களை தட்டிவிடுங்கள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. களத்தில் நான் இருக்கிறேன். யாரும் உங்கள் மீது கை வைக்க முடியாது. பொறுப்பை பகிர்ந்துகொள்ளுங்கள் எல்லாவற்றையும் நீங்களே பார்க்க வேண்டும் என்றில்லை. கட்சி யாருடைய சொத்தும் கிடையாது." என்றார்

"நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என ஆளுநர் பயந்திருக்கலாம்" - மசோதா ஒப்புதல் குறித்து ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்றது.அதில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவம் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாட... மேலும் பார்க்க

"தமிழக மக்கள் கட்சிகளின் செயலைத்தான் பார்ப்பார்கள்; பணத்தை அல்ல” - விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பதில்

விருதுநகரில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஞானசேகரன் வழக்கை நடத்திய சட்டத்துறை, நீதித்துறைக்குப் பாராட்டுக்கள். கடுமையான தண்டனையை விதித... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக முதல்வர் ஞானசேகரன் பாலியல் வழக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த தீர்ப்பை பற்றி பெருமையாக பே... மேலும் பார்க்க

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க