செய்திகள் :

Point Nemo: நெருங்க முடியாத கடல் துருவத்தை கடந்து சாதனை படைத்த இந்திய கடற்படை வீராங்கனைகள்..!

post image

பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது பாயிண்ட் நெமோ (Point Nemo) பகுதி. இது யாரும் நெருங்க முடியாத கடல் துருவமாகும். மக்கள் வசிக்கும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 2,688 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியை, கடற்படையில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்கள் கடந்த வியாழனன்று நண்பகல் 12.30 மணியளவில் கடந்து, சாதனை படைத்துள்ளனர்.

லெப்டினன்ட் கமாண்டராக இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் தில்னா மற்றும் ரூபா, இந்திய கடற்படை கப்பலான (INSV) தாரிணியில் உலகளாவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாயிண்ட் நெமோவைக் கடந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளனர்.

லெப்டினன்ட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா (Lt Cdr Dilna K & Lt Cdr Roopa)

மூன்று கிரேட் கேப்ஸ் வழியாக இருவர் இணைந்து உலகைச் சுற்றி வருவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த கப்பல் பயணம், நவிகா சாகர் பரிக்ரமா இரண்டாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கடற்படை கப்பலான தாரிணி, கோவாவில் இருந்து தனது உலகம் சுற்றும் பயணத்தை அக்டோபர் 2, 2024 அன்று தொடங்கியது. டிசம்பர் 22 -ல் நியூயார்க் நகரில் உள்ள லிட்டல்டன் துறைமுகத்தை அடைந்த தாரிணி, பயணத்தின் இரண்டாம் நிலையை நிறைவு செய்தது. இம்மாத தொடக்கத்தில் லிட்டல்டனிலிருந்து மீண்டும் நீண்ட பயணத்திற்கு புறப்பட்ட தாரிணி, சுமார் 5,600 கடல் மைல்களை கடந்து, பால்க்லாந்து தீவுகளில் உள்ள ஸ்டான்லி துறைமுகத்தை அடைந்தது. வழியில், பாயிண்ட் நெமோவை கடந்த சாதனையையும் சேர்த்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவிற்கு இடையே அமைந்துள்ள பாயிண்ட் நெமோ, அருகிலுள்ள நிலத்திலிருந்து சுமார் 1,600 மைல்களுக்கு மேல் பூமியில் மிகவும் தனிமையால் சூழ்ந்த இடமாகும். மக்கள் வசிக்கும் நிலப்பரப்பிலிருந்து இப்பகுதி மிக தொலைவில் இருப்பதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களே பெரும்பாலும் இப்பகுதிக்கு நெருக்கமாக உள்ளனர். 2030 -ல் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட உள்ள ஐஎஸ்எஸ் விண்கலம் உள்பட, பணிநீக்கம் செய்யப்பட்ட விண்கலங்களுக்கும் இப்பகுதி 'விண்கல கல்லறையாக' விளங்குகிறது.

அணுக இயலாத பெருங்கடல் துருவம் ( Point Nemo )

அணுக இயலாத பெருங்கடல் துருவம் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் (Point Nemo) பாயிண்ட் நெமோவை, 1992 ஆம் ஆண்டில் கனடிய-ரஷ்ய பொறியாளரான ஹ்ரவோஜே லுகட்டலே கண்டுபிடித்தார். ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஸ்கைலேப் உட்பட 260-க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுவதைத் தடுக்கப்பதற்காக, இப்பகுதிக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின் தலைவரான ஹோல்கர் க்ராக், "பாயிண்ட் நெமோவை சுற்றி பரந்த மக்கள் வசிக்காத பெருங்கடல் இருப்பதால், விண்வெளி குப்பைகளை நுழைக்க இது தகுதிவாய்ந்த பாதுகாப்பான இடம்" என கூறியுள்ளார்.

கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்

தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. அப்போது பெருவெளியில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்த... மேலும் பார்க்க

America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பின்னணியும்!

எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப் நட்புஉலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா - டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹ... மேலும் பார்க்க

``மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது எப்படி?'' -தேர்தல் கமிஷனிடம் ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில... மேலும் பார்க்க

``மனநிலை பாதிப்பு... விஜய்யின் வளர்ச்சி சீமானுக்கு புடிக்கல..'' -சீமானை சாடிய புகழேந்தி

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?

Doctor Vikatan: தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா... ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?டயாப்பட்டிஸ் உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்த... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைம... மேலும் பார்க்க