செய்திகள் :

Pooja Hegde: ``தெலுங்கு படங்களில் நடிக்காதது ஏன்?'' - பூஜா சொன்ன காரணம்!

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்துள்ளா பூஜா ஹெக்டே.

இந்த படத்தில் இடம்பெற்ற துள்ளலான கனிமா பாடல் மூலம் இணையத்தைக் கலக்கியுள்ளார்.

சில ஆண்டுகள் முன்பு வரை தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம்வந்த பூஜா, 2022-ம் ஆண்டு முதல் ஏன் தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

Retro Movie
Retro Movie

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், "நான் புதிதாக எதாவது முயற்சிக்க விரும்பினேன். வெறும் ஆசைக்காக மட்டும் ஒரு படத்தில் இணைய வேண்டாம் என நினைத்தேன்.

ஒரு நல்ல கதையில், கதாப்பாத்திரத்தில் இணைய வேண்டும் என நினைத்தேன். வேலையில் உற்சாகமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதுதான் காரணம் வேறொன்றும் இல்லை." எனக் கூறியுள்ளார்.

Pooja Hegde

மேலும் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் பேசியுள்ளார். "ஏதேதோ காரணங்களுக்காக, அவற்றில் இணைவது சரியாக இருக்கும் எனத் தோன்றவில்லை." என்றார்.

இப்போதைய லைன் அப்பில் தமிழ் மற்றும் இந்தியில் சுவாரஸ்யமான கதைகள் உள்ளதாக கூறியவர், இந்த ஆண்டு மீண்டும் தெலுங்குக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தெலுங்கு படம் பற்றி பேசுகையில், "நான் தெலுங்கு சினிமாவில் தொலைந்துபோன குழந்தை போல உணர்ந்தேன். இப்போது புதிய தெலுங்கு படத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்.

இந்த படத்தின் தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. தேதிகள் முடிவானதும் உங்களுக்கு இது என்ன படம் எனத் தெரியவரும்." எனக் கூறியுள்ளார்.

Pooja Hegde

Pooja Hegde's Lineups

சமீபத்தில் பூஜா, சாஹித் கபூருடன் நடித்த தேவா திரைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக வருண் தவானுடன், 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' என்ற படத்தில் இணையவுள்ளார்.

ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Tamannaah: `மில்கி பியூடி' என அழைக்கப்படுவது குறித்து ஓப்பனாக பேசிய தமன்னா!

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை தமன்னா பாட்டியாவின் ஓடெல்லா 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கான புரோமோஷன்களில் கலந்துகொண்ட தமன்னா, தனது கரியர் குறித்தும் பல ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

AA22 x A6: அல்லு அர்ஜூன் அட்லி இணையும் `AA22' பட அப்டேட் வெளியானது

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரூ.1500 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

Nani: ``என் மகனுடன் ஜெர்சி படத்தைப் பார்த்த அந்த அனுபவம்..!'' - நெகிழும் நானி

"எனக்கு போ கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வாழ்க்கைக்கான பாடத்தை எல்லாம் கற்றுக் கொண்டது போவிடமிருந்துதான். நான் சோர்வாக உணரும்போதெல்லாம் அந்த திரைப்படத்தில் வரும் வசனங்களை நினைத்துக்கொள்வேன்.... மேலும் பார்க்க

Tollywood: நந்தமுரி, கோனிடெல்லா, அல்லு, அக்கினேனி - டோலிவுட் குடும்பங்களின் கதை |Depth

கோலிவுட், பாலிவுட்டைக் காட்டிலும் டோலிவுட்டில் நடிகர்களின் அடுத்தடுத்த தலைமுறையினரும் சினிமாவில் மும்மரமாக ஈடுபட்டு வெவ்வேறு பங்காற்றி இன்று முன்னணியில் இருக்கிறார்கள். இதற்கென அவர்கள் கடுமையான விமர்ச... மேலும் பார்க்க

"கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்பவர்கள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள்" - கொதிக்கும் நடிகர் ரகு பாபு

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் பக்தி - பேண்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் தெலுங்கு மொழி திரைப்படம் 'கண்ணப்பா'.சிவனை வழிப்படும் தீவிர பக்தரான கண்ணப்பரைப் பற்றியது இப்படம்.நடிகர் விஷ்ணு மஞ்சு க... மேலும் பார்க்க

David Warner: ``சினிமாவுக்குள் வருவது முதலில் பயமாக இருந்தது!'' - டோலிவுட் மேடையில் டேவிட் வார்னர்

டோலிவுட் நடிகர் நித்தின் மற்றும் ஶ்ரீ லீலா நடிப்பில் உருவாகியிருக்கிற `ராபின்ஹுட்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு கேமியோ ரோலில் நடி... மேலும் பார்க்க