pregnancy safe skin care: கர்ப்ப காலத்தில் எந்த சீரம், மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம்?
பொதுவாக கர்ப்ப காலத்தில் தோல் பராமரிப்பு ( ஸ்கின் கேர்) அவசியமாக இருக்கிறது. இளைய தலைமுறை, வயதானவர்கள் என அனைவரும் தங்களது தோலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
முன்பெல்லாம் சருமத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று க்ரீம்களை தேடி வாங்குவார்கள். ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகளிடம் பாதுகாப்பான வழிகளில் எப்படி ஸ்கின் கேர் செய்வது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒவ்வொரு தோலின் தன்மைக்கு ஏற்ற ஸ்கின் கேர்களும், சரும பிரச்னைகளுக்கு ஏற்ற ஸ்கின் கேர்களும் உள்ளன. அந்த வகையில் கர்ப்ப காலத்தில் சருமத்தை பாதுகாக்க என்னென்ன ஸ்கின் கேர் பொருள்கள் பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மற்ற நேரங்களை விட குறிப்பாக கர்ப்ப காலத்தில் முகத்தில் கருமை, முகப்பரு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும். ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய இந்த சரும பிரச்னைகளுக்கு தற்கால சொல்யூஷனை கூறுகிறார் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல்.
மருத்துவரின் கூற்றுப்படி, அதிக கெமிக்கல் இல்லாத ஸ்கின் கேர் பொருட்களை கர்ப்பிணிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மார்னிங் ஸ்கின் கேர்
காலையில் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிவிட்டு, மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் தோல்கள் அதிகமாக வறண்டு போகும். எனவே மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது அவசியமாகிறது.
பாதுகாப்பான இன்கிரிடியன்ஸ்
செராமிக்ஸ், ஹைலூரோனிக் கொண்ட மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது பாதுக்காப்பானது.

சன் ஸ்கிரீன்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மினரல்ஸ் சன் ஸ்கிரீன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஸின்க் ஆக்சைடு ஏஎம்டி டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற பிஸிக்கல் சன் ஸ்கிரீன்கள் பாதுகாப்பானவை. கெமிக்கல் - மினரல் சன் ஸ்கிரீன் என்று மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அதனையும் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிசிகல் சன் ஸ்கிரீன் மட்டுமே கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.

நைட் ஸ்கின் கேர்
இரவுகளில் சீரம் அல்லது நைட் கிரீம் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் முக கருமையை போக்க சில ஸ்கின் கேர் தயாரிப்புகளை கூறுகிறார் மருத்துவர் கோல்டா.
அசெலிக் ஆசிட்
கோஜிக் ஆசிட்
வைட்டமின் சி ஆகியவை கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய ஸ்கின் கேர் இன்கிரிடியன்ட்ஸ்
இவை பாதுகாப்பானதாக இருந்தாலும் குறைந்த கான்சென்ட்ரேஷன்ஸ் பயன்படுத்துவது நல்லது என்று வலியுறுத்துகிறார் மருத்துவர் கோல்டா.
தோலில் ஏற்படும் ஸ்டெர்ச் மார்க்குக்கு, தேங்காய் எண்ணெய் கொக்கோ வெண்ணெய் போன்ற மென்மையான பொருட்களைப் பயன்படுத்தலாம். கெமிக்கல் எக்ஸ்போலியட் செய்ய வேண்டுமென்ற தேவை இருந்தால் மருத்துவரை அணுகி லேட்டிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் போன்றவை உங்களது சருமத்திற்கு ஏற்ற அல்லது பயன்படுத்தலாமா என்று கேட்டுக் கொண்டு இதனை பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார் மருத்துவர் கோல்டா.
குறிப்பு: கர்ப்ப காலத்தில் தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.