செய்திகள் :

Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! - போர் முடிவுக்கு வருமா?

post image

2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் 22 சதவிகித பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் - ரஷ்யாப் போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். அதற்காக ரஷ்ய அதிபர் புதினுடன் 4 முறை ட்ரம்ப் ஆலோசனை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்​கா, ரஷ்ய அதிபர்​கள் நேரடியாக சந்தித்து உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

விமான தளத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைதட்டி வரவேற்ற ட்ரம்ப், புதினுடன் சுமார் 3 மணி நேரம் உரையாற்றினார். அதன்​பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், ``உக்​ரைன் எங்​களு​டைய சகோதர நாடாகவே கருதுகிறோம். இரு நாடு​களின் வேர்​களும் ஒன்​று. ஆனால் ரஷ்​யா​வின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​ட​தால் போர் மூண்​டது. இது எங்​களுக்கு மிகுந்த வேதனை அளிக்​கிறது. இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. உக்ரைனில் அமைதி திரும்ப புதிய பாதை திறந்​திருக்​கிறது.

ஆனால், உக்ரைனும் ஐரோப்​பிய நாடு​களும் சேர்ந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்​டும். இன்​றைய தின பேச்சுவார்த்தையின் மூலம் ரஷ்​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒத்​துழைப்பை அதி​கரிக்க வாய்ப்பு இருக்​கிறது. இதன்​மூலம் உக்​ரைன் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண முடி​யும். அதோடு அமெரிக்​கா, ரஷ்யா இடையி​லான உறவும் மேம்​படும். உக்​ரைன் பிரச்சினைக்கு விரை​வில் தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. நல்ல முன்னேற்றத்தை உணர முடிந்தது. ஆனால், எந்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்தாகவில்லை. உக்ரைன் விவகாரத்தை முடித்துவைக்க ஜெலன்ஸ்கியுடனும் நேட்டோ அமைப்பு தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுக்கிறேன். எனக்கும் புதினுக்குமான நட்பு இன்னும் நீடிக்கிறது. ரஷ்யா குறித்து பரப்பப்படும் எதிர்மறையான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே. உக்ரைன் போரை நாங்கள் நிறுத்துவோம்." என்றார்.

உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி ஆகஸ்ட் 18-ம் தேதி (நாளை) அமெரிக்க தலைநகர் வாஷிங்​டன் செல்​கிறார். அப்​போது அதிபர்​ ​ட்ரம்​பை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியான தகவலில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளைக் கொண்ட ஒரு பகுதியான டான்பாஸை விட்டு உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

அதற்கு பதிலாக, தெற்கு உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுகப் பகுதியான கெர்சன் மற்றும் சபோரிஷியாவில் ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலை நிறுத்தும் என புதின் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேடையில் காந்திமதி டு ராமதாஸ் - ராமதாஸ் தலைமையிலான சிறப்புப் பொதுக்குழு கூட்டம்|Photo Album

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொ... மேலும் பார்க்க

Rahul Gandhi: "இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்" - வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற... மேலும் பார்க்க

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நா... மேலும் பார்க்க

CPI: புதிய மாநிலச் செயலாளர் தேர்வு? முத்தரசன் மாற்றப்படுவாரா? - பரபரக்கும் சேலம் மாநாடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து... மேலும் பார்க்க

"மலிவான அரசியல் செய்கிறார்; ஆளுநர் இங்கேயே இருக்கட்டும்..!" - முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொ... மேலும் பார்க்க

RSS: ``இந்தியாவின் தாலிபன் போன்றது ஆர்.எஸ்.எஸ்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமரசனம்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழ... மேலும் பார்க்க