செய்திகள் :

Rain Alert: 'இன்று இரவு முதல் கனமழை' - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானிலை மையம் சொல்வதென்ன?

post image
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Rain Alert

இந்நிலையில் இன்றும், நாளையும் (டிச. 2, 3) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதில் குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கோவையிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்று இரவு முதலே மழை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2.12.2024 - இன்று

ரெட் அலார்ட் (அதி கனமழை ): நிலக்கரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டங்கள்.

ஆரஞ்சு அலார்ட் (மிகக் கனமழை): கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல்.

மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி.

மேற்குத் தொடர்ச்சி மலை

3.12.2024 (நாளை - செவ்வாய்)

மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர்.

இந்த கனமழையில் அதிகபட்சமாக வெள்ளம் வருவது, மரங்கள் விழுவது, மண் சரிவு முதல் தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்வது வரையிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Rain Alert: 'டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும்' - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து இந்த டிசம்பர் மாதத்திற்கான பருவமழை ஆரம்பிக்கவிருக்கிறது.ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் வடதமிழகக் கடலோரப் பகுதிகளான புதுவை, விழுப்ப... மேலும் பார்க்க

Live: புயல் பாதிப்பு: திண்டிவனம்: நிரம்பி வழியும் கிடங்கள் ஏரி - வீடியோ

நிரம்பிய சித்தேரி...ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் சித்தேரி ஏரி நிரம்பி வழிகிறது.நிரம்பி வழியும் கிடங்கள் ஏரி!ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்ட... மேலும் பார்க்க

Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் - மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும்‌ மழை

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில... மேலும் பார்க்க

Rain Alert : இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும், தமிழ்நாட்டில் மழை இன்னும் விட்டபாடில்லை.நேற்று வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திரு... மேலும் பார்க்க

Fengal Cyclone: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை; புதுச்சேரியைப் புரட்டிய புயல் | பாதிப்பு வீடியோக்கள்

புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர்ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்... மேலும் பார்க்க