Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
Rain Alert: புயல் எப்போது கரையைக் கடக்கும்? அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இன்று சென்னைக்கு அருகில் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது ஃபெங்கல் புயல்.
இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மகாபலிபுரத்திற்கும், கரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் காரைக்கால் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையுடன் பலத்தக் காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்ட இயக்குநர் பாலச்சந்திரன், "ஃபெங்கல் புயல் புதுவைக்கு வடகிழக்கே 100 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 100 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டு மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இப்புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும்.
அடுத்து வரும் 24 மணிநேரத்திற்குக் கனமழை எச்சரிக்கை
ரெட் அலார்ட் (அதி கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி (ஓரிரு இடங்களில்)
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை): வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் (ஓரிரு இடங்களில்)
மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி (ஓரிரு இடங்களில்)
நாளை ஞாயிற்றுக் கிழமை(டிசம்பர் 1)
ரெட் அலார்ட் (அதி கனமழை): கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி (ஓரிரு இடங்களில்)
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருப்பத்தூர் மற்றும் கடலோர மாவட்டங்கள். (ஓரிரு இடங்களில்)
திங்கள் கிழமை (டிசம்பர் 2)
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை): மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் நிலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்.(ஓரிரு இடங்களில்)
மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை (ஓரிரு இடங்களில்)
திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில், அவ்வப்போது 90 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக் கூடும்.
வேலூர், திருப்பத்தூர், கள்ளுக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில், அவ்வப்போது 70 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக் கூடும்.
மீனவர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு (டிச 1, 2) கடலுக்குள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில்தான் அதிக மழைப் பெய்த்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.