செய்திகள் :

Redin Kingsley: ``இளவரசி பிறந்திருக்கிறாள்'' - மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி

post image

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த கதபாத்திரம் மக்களிடையே சரியாக க்ளிக் ஆனதும் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கியது.

இதனை தொடர்ந்து `டாக்டர்', `பீஸ்ட்', `ஜெயிலர்' என அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்று பிஸியான காமெடியனாக வலம் வருகிறார்.

நடிகை சங்கீதா கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது சமுக வலைதளப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி அறிவித்திருந்தனர்.

கடந்த மாதம் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி - சிரீயல் நடிகை சங்கீதா
ரெடின்கிங்ஸ்லி - சிரீயல் நடிகை சங்கீதா

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ``உங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இளவரசி பிறந்திருக்கிறாள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

`குழந்தையை அடிப்பது, மேட்ச் பிக்சிங் காட்சிகளில் நடிக்க காரணம் இதுதான்' - நடிகர் மாதவன்

YNOT ஸ்டூடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.YNOT Studio மூலம் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’... மேலும் பார்க்க

Coolie Update: கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு; இந்த தேதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா?

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கேக் கட்டிங் தருணமும் நடந்த... மேலும் பார்க்க

தனுஷ் கால்ஷீட் விவகாரம்: "பெற்ற முன் பணத்திற்கு நடித்துத் தருவதே நியாயம்'' - Fivestar பட நிறுவனம்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிர்யேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது. இதனை ... மேலும் பார்க்க

Dhanush : இட்லி கடை ரிலீஸ் தள்ளிவைப்பு - 'குபேரா' பர்ஸ்ட்; 'இட்லி கடை' நெக்ஸ்ட் - பரபர அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கிற `இட்லி கடை' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், படத்தின் 15 சதவிகித படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்ப... மேலும் பார்க்க

அந்தகனுக்குப் பின் பிரசாந்த்தின் அதிரடி; மீண்டும் இணையும் கூட்டணி! - பிரசாந்த் பிறந்தநாள் அப்டேட்

டாப் ஸ்டார் பிரசாந்த்திற்கு கடந்த 2024 ராசியான ஆண்டு. ஹீரோவாக 'அந்தகன்', விஜய்யின் நண்பராக 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என இரண்டு படங்கள் அவருக்கு வெளியாகின. இரண்டிலுமே பிரசாந்தின் கம்பேக் படங்களாக அம... மேலும் பார்க்க

Vikram: ``வாழ்க்கையில் எவ்வளோ பிரச்னை..!" - வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக... மேலும் பார்க்க