சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
Retro: "ஒரு Female Gangster படம் பண்ணுங்க" - கார்த்திக் சுப்புராஜிடம் பூஜா ஹெக்டே வேண்டுகோள்
சூர்யா - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாயாரணன் இசையமைத்துள்ளார். நேற்று (18.04.2025) சென்னையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைக்குழுவினர் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.
"அரபிக் குத்து முதல் கனிமா வரை"
நிகழ்ச்சியில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, "இது என்னுடைய மூன்றாவது தமிழ்படம்தான். ஆனால் மக்களிடமிருந்து நான் எப்போதுமே தமிழ் சினிமாவில் இருப்பது போல அளப்பரிய அன்பு கிடைத்திருக்கிறது.
இது என்னுடைய இரண்டாவது இசை வெளியீட்டு விழாதான். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் சினிமாவுக்கு நன்றி.
அரபிக் குத்து முதல் இப்போது கண்ணிமாவை வரை ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்.
'ஒரு பெண்-கேங்ஸ்டர் படம் பண்ணுங்க கார்த்திக் சார்'
உங்களின் ருக்மினியாக என்னை பார்த்ததுக்கு நன்றி கார்த்திக் சார். நான் அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன்.
நீங்கள் எப்படி சாதாரணமான விஷங்களில்கூட அழகை ரசிக்கிறீர்கள் என்பதை நான் கவனித்திருக்கேன். நீங்க நிறைய கேங்ஸ்டர் படம் எழுதியிருப்பீர்கள். அப்படியே ஃபீமேல் கேங்ஸ்டர் படமும்.... (சிரிக்கிறார் ).
சூர்யா சாருடன் பணியாற்றியது எனக்கு இன்ஸ்பெயரிங்காக இருந்தது. அவருடைய கண்கள் வசீகரிக்கும்.
கனிமா பாடலுக்கான ரீல்ஸ் பார்த்தேன். எல்லாமே அழகாக இருக்கு. ஒரு ரீலுக்காக சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கீங்க.
சூர்யா சாரிடம் எப்போதும் ஒரு காபி இருக்கும். டயர்ட்டாக இருக்கும்போதெல்லாம் அந்த ஸ்பெஷல் பில்டர் காபியை சூர்யா சார் கொடுப்பார்." எனப் பேசினார்.