பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்ப...
Sachin: பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் சச்சின் டெண்டுல்கரா... செப்டம்பர் 28-ல் முக்கிய அறிவிப்பு!
முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி கடந்த 2022 அக்டோபரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகப் பொறுப்பேற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பி.சி.சி.ஐ-யின் தலைவராகச் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதைப் பூர்த்தி செய்தார்.
பிசிசிஐ-யின் விதிகளின்படி 70 வயதைக் கடந்த ஒருவர் பி.சி.சி.ஐ-க்கு தலைவராகச் செயல்பட முடியாது என்பதால் தானாக அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

பின்னர், பி.சி.சி.ஐ-க்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் துணைத் தலைவரான ராஜிவ் சுக்லா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறிருக்க, செப்டம்பர் 28-ம் தேதி பி.சி.சி.ஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பி.சி.சி.ஐ-க்கு தலைவராகப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் (SRT Sports Management Private Ltd) நிறுவனம் இது குறித்து விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது.
ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" தெரிவிக்கப்பட்டிருக்கிறது.