செய்திகள் :

Sai Pallavi: `ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?' -ரசிகரின் கேள்விக்கு சாய் பல்லவி ஜாலியான பதில்

post image

நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சாய்பல்லவி தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், நடிப்பை தவிர வேறு எதில் ஆர்வம் அதிகம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

சாய் பல்லவி

அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, `` ஓய்வு நேரத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களை செய்வேன். சமீபத்தில், நான் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறேன். நான் இன்னும் அதில் அவ்வளவு திறமைசாலியாகவில்லை. ஓய்வு நேரங்களில் எனக்குத் தனிமை பிடிக்கும். தனியாக இருப்பது பிடிக்கும். அப்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். நடனமாடுவேன்... விரும்பினால் சமைப்பேன்... அப்படி முழுமையாக சொல்ல முடியாது.

பெரும்பாலும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன். என் தோட்டத்துக்குச் செல்வேன். இப்போது சில விவசாய வேலைகள் நடக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து கேரட், உருளைக்கிழங்கு போன்றவைகளை அறுவடை செய்வேன். இப்படித்தான் போகும் என் ஓய்வு நேரங்கள்" என்றார்.

சாய் பல்லவி

ஓய்வு நேரத்தில் நம்மை மகிழ்வுடன் வைத்திருக்கும் செயல்களில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைத்து, படைப்பாற்றலை அதிகரிக்கும். நம் மனநிலையை மேம்படுத்தி, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்

Dragon : `தனுஷ் சார் கூட போட்டியெல்லாம் இல்ல...' - டிராகன் குறித்து பிரதீப் ரங்கநாதன்

'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'டிராகன்'.இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிர... மேலும் பார்க்க

Keerthy Suresh : 'நட்பே காதல் துணையெனவே' - கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி புகைப்படங்கள் | Photo Album

கீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிகீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் ஆண்டனிகீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷ் ... மேலும் பார்க்க

ஜான்வி கபூர், துஷாரா... அடுத்தடுத்து இரண்டு வெப் சிரீஸ்கள் - பிரபல இயக்குநரின் லைன்-அப்

''களவாணி', 'வாகை சூடவா' உள்பட பல படங்களை இயக்கிய ஆர். சற்குணம், அடுத்து இரண்டு வெப் சிரீஸ்களை இயக்க உள்ளார் என்றும், ஒன்றை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும், இன்னொரு வெப் சிரீஸை இயக்குநர்கள் புஷ்கர் - க... மேலும் பார்க்க

Vidaamuyarchi: ``சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.." - நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஓபன் டாக்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில்... மேலும் பார்க்க

BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்' திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இ... மேலும் பார்க்க