ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?
செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
'பங்குச்சந்தை ஏன் இப்படி இருக்கிறது?', 'தற்போது முதலீடு செய்யலாமா?' போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர்.
"2016-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை பாசிட்டிவ் க்ளோஸாகவே இருந்தது. இடையில், கொரோனா பாதிப்பினால் இறங்கியிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது, அதுவுமே பாசிட்டிவ் க்ளோஸ் தான்.
இந்த ஆண்டும், இதுவரை பார்க்கும்போது பெரும்பாலும் பாசிட்டிவ் க்ளோஸ் தான். ஆனால், இந்த ஆண்டை மொத்தமாக கணக்கிட்டு பார்க்க டிசம்பர் 31 வரை காத்திருக்க வேண்டும்.
பங்குச்சந்தை புள்ளிகள் 21,500 கீழ் சென்றால் தான் நெகட்டிவ் க்ளோஸ் எனப்படும். இதுவரை எந்த உலக சந்தையும் இந்த நிலைக்கு சென்றதில்லை. இந்த வகையில், இந்திய பங்குச்சந்தையும் பாசிட்டிவ் க்ளோஸாலவே தான் இருந்துள்ளது.
மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில், இந்திய பங்குச்சந்தை தான் விலை உயர்ந்த பங்குச்சந்தை ஆகும்.
தற்போதைய பங்குச்சந்தை இறக்கத்திற்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் 4.1 கோடி பேர் டிமேட் கணக்கு வைத்திருந்தார்கள். கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியான தகவலின் படி, 17.88 கோடி பேர் தற்போது டிமேட் கணக்கு வைத்திருக்கிறார்கள். இது அசுர வளர்ச்சி ஆகும்.
2020-ம் ஆண்டு ஜனவரி டு மார்ச்சில் கரெக்ஷன் நடந்தது. அதன் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் தான் சந்தையில் அதிக சதவிகிதத்தில் கரெக்ஷன் நடந்தது. இடையில் எந்த கரெக்ஷனும் பெரிய அளவில் ஏற்படவில்லை. அந்த இடைப்பட்ட சமயத்தில் தான், பங்குச்சந்தைக்குள் புதியதாக 77 சதவிகிதம் பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் அதுவரை எந்தவொரு கரெக்ஷனையும் பார்த்ததில்லை. அது தான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இவர்களுக்கு ஐ.பி.ஓ பற்றி தெரியாமல், சந்தை மதிப்பு அதிகம் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டார்கள். ஆனால், அதில் உள்ள ரிஸ்க் யாருக்கும் தெரியவில்லை.
100 பி.ஐ-க்கு மேல் வணிகம் ஆகும் பங்குகள் அதிகம் உள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களில் வளர்ச்சி இல்லை. இந்த சூழலில், சந்தை அதன் தற்போதுள்ள வளர்ச்சியை தக்க வைத்துகொள்வது சற்று கடினம். அதனால் தான், இறக்கமானது அதிகமாக நடக்கிறது.
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ.52,000 கோடி. ஆனால், அதன் வருமானமோ ரூ.4,200 கோடி தான். இப்போது லாபமும் குறைவு...வருமானமும் குறைவு. ஆனால், இவர்கள் பி.இ 480 ஆகும். இந்த பங்கில் 91 சதவிகிதம் மற்றும் சிறப்பு பங்கு என 8 சதவிகிதமும் அரசாங்கத்திடமே உள்ளது. இதில் பொதுமக்கள் வாங்கக்கூடிய பங்கின் சதவிகிதமோ வெறும் 1 சதவிகிதம் தான். 99 சதவிகிதத்தை பார்த்து இந்த 1 சதவிகித மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
தற்போதைய சந்தையில் 60 - 70 சதவிகித பங்குகள் அதிக மதிப்பில் உள்ளது. கரெக்ஷன் வந்தால் இவை சரியாகும்.
ஆகையால், தற்போது சந்தையில் லாபம் பார்க்க வாய்ப்பு குறைவு. எந்த சந்தையிலும் லாபம் இருக்கும். அதனால், ஆராய்ந்து, கவனமாக, அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்கலாம். புதிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை ரிஸ்க் அறிந்து கவனமாக செய்ய வேண்டும்" என்று கூறினார்.