`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு ...
'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
'இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் சதிச்செயல்'என இதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், ஆர்ஜேடி உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது.
#SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட… pic.twitter.com/vm9Qiq6SMw
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 26, 2025
இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்!" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.




















