தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!
Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ்ருதி
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோட் முழுவதும் விஜயா நடனம் ஆடிக்கொண்டே இருந்தார். சும்மா சொல்லக்கூடாது அவரது நடன அசைவுகளின் நளினம் தாண்டவம் ஆடியது. பார்வதியும் விஜயாவுக்கு நிகராக நடனமாடி அசத்தினார்.
சீரியல் என்றாலே சதா சண்டை சச்சரவு என்ற பிம்பம் இருக்கையில் மாமியார், அம்மா ரோலில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டேன்ஸ் ஆடும் காட்சிகள் வைத்தது பாராட்டுக்குரியது.
ரவி வேலை செய்யும் ஹோட்டலில் ஓனர் நீத்து தவறிக் கீழே விழ, அவரை ரவி கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார். இந்தக் காட்சியை ஸ்ருதி பார்த்துவிட்டு மனமுடைந்து போகிறார். ஸ்ருதியை பார்த்த ரவி அதிர்ச்சியடைகிறார். என்ன நடந்தது என்பதை சொல்வதற்குள் ஸ்ருதி அங்கிருந்து கிளம்புகிறார்.
மாலை ரவி-ஸ்ருதி திருமண நாள் நிகழ்வுக்கு அனைவரும் வருகின்றனர். ஆனால் ஸ்ருதி மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு எங்கோ சென்றுவிடுகிறார். அவரை தொடர்புகொள்ள முடியாமல் ரவி தவிக்கிறார். ஸ்ருதி அம்மா அப்பா, விஜயா, மனோஜ் என அனைவரும் ஸ்ருதியை கேட்கின்றனர். ரவி என்ன சொல்வது எனத் தெரியாமல் அவதிப்படுகிறார்.
ஸ்ருதி காணாமல் போன விஷயத்தை ரவி முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் மீனாவும் ஸ்ருதியின் ரெகார்டிங் ஸ்டூடியோ சென்றுப் பார்க்கின்றனர். அங்கு வேறு ஒரு முகவரியை சொல்ல அங்கும் போய் விசாரிக்கின்றனர். அப்போது ஸ்ருதி விவாகரத்துச் செய்யும் வழக்கறிஞரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வருகிறது. இருவரும் வழக்கறிஞர் இருக்கும் முகவரிக்கும் செல்கின்றனர். அங்கு ஸ்ருதி காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறார்.
ரவியை விவாகரத்து செய்யப் போவதாக சொல்கிறார். மீனாவும் முத்துவும் அதிர்ந்துப் போகின்றனர். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.
எப்படியும் ஸ்ருதியை சமாதானப்படுத்தி, நடந்த உண்மையை விளக்கி மீனா புரிய வைத்துவிடுவார். ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் நடந்துவிடும்.
ஸ்ருதி ரவியிடம் சண்டைப் போடும் காட்சிகள் 2k தம்பதிகளை நினைவூட்டுகிறது. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு கூட விவாகரத்து முடிவு எடுப்பது, உறவை முறித்து கொள்ள நினைப்பது, பிரசவ வலிக்கு பயந்து வாடகை தாய் முறையை தேர்வு செய்வது என முதிர்ச்சியின்மையுடன் நடந்து கொள்கிறார்.
இந்த பிரச்னைகளுக்கு நடுவே மீனாவின் தொழில் போட்டியாளரான சிந்தாமணி மீனாவின் தொழிலில் தடைகளை ஏற்படுத்த விஜயாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சமீபத்திய ப்ரோமோவில் விஜயாவிடம் மீனா மண்டபத்திற்கு செல்வதை தடுக்க விஜயாவிடம் அடிப்பட்டது போல நடிக்க சொல்கிறார்.
விஜயாவும் அப்படியே செய்கிறார். ஆனால் மீனா வீடியோ கால் மூலமாக மண்டப அலங்காரங்கள் எப்படி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்து வேலையை முடிக்கிறார். முத்து வீட்டிற்கு வந்ததும் மீனாவின் திறமையை பாராட்டுகிறார். வீட்டில் இருந்தபடியே மீனா மண்டப அலங்காரத்தை எப்படி செய்து முடித்தாள் என விஜயா குழம்பிப் போகிறார்.
இதனிடையே ரோகிணி ரிலாக்ஸாகிவிட்டார். மொபைல் விஷயத்தில் இருந்து தப்பித்துவிட்டார். அப்பா விஷயத்தில் இருந்தும் ஓரளவுக்கு. இனி அடுத்த சோதனை வரும் போதும் சமாளித்துவிடுவார். பொறுத்திருந்து பார்ப்போம்.