செய்திகள் :

Siragadikka aasai: மாட்டிக்கொள்வாரா ரோகிணி? - மீனாவுக்கு வந்த சந்தேகம்

post image
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் வீடு வாங்கும் பிளானில் பல சொதப்பல்கள் நடக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டிற்கான மீதமுள்ள பணத்தை புரட்ட மனோஜ் வங்கி அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

ஆனால் அவர்கள் கொடுக்கும் லோன் தொகை போதவில்லை என்பதால் மனோஜ் அண்ணாமலையிடம் சொத்தை பிரித்துத் தரச் சொல்கிறார். அதுவும் வீட்டை விற்று அதில் வரும் பணத்தைத் தரச் சொல்கிறார். மனோஜின் சுயநலமான பேச்சால் விஜயா உட்பட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

அண்ணாமலை வீட்டை விற்க முடியாது என தீர்க்கமாகச் சொல்லிவிடுகிறார். ஆனால் மனோஜ் விட்ட பாடில்லை. தொடர்ந்து அவரிடம் நச்சரிக்கிறார்.

Siragadikka aasai

மனோஜின் சுயநல பேச்சு முத்துவுக்கு கோபத்தை வரவழைக்கிறது. அப்பா அம்மாவுக்கு என்று இருக்கும் இந்த வீட்டை விட்டு அவர்கள் எங்கு போவார்கள் என்று சரியான கேள்வியை முன்வைப்பார் முத்து.

இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் பெரும்பாலும் வயதான தாய் தந்தையை கூடவே வைத்துக் கொள்வது, வேலை செய்யவும், குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் தான் என்று யதார்த்தமான உண்மையைச் சொல்வார் முத்து.

மனோஜை முத்து ஏதாவது சொல்லும் போதெல்லாம் முந்திக் கொண்டு சப்போர்டுக்கு வரும் விஜயா இம்முறை அமைதியாக முத்து சொல்வது தான் சரி என்பது போல் ஆமோதித்தார். ரோகிணியை தவிர வீட்டில் இருந்த அனைவரும் மனோஜுக்கு எதிராக தான் பேசினர்.

இறுதியாக விஜயாவே இந்த வீட்டை விற்க முடியாது என்று சொல்லிவிட, ரோகிணியும் மனோஜும் மனமுடைகின்றனர்.

Siragadikka aasai

அந்த சமயத்தில் முத்து ஒரு ஐடியா சொல்கிறார். ரோகிணியின் அப்பா மலேசியாவில் பெரிய பிஸ்னஸ் மேன், அவரிடமே பணம் கேட்கலாமே என்று சொல்ல விஜயாவுக்கு மனோஜும் `ஆமா ல’ என்பது போல் ரோகிணி பக்கம் திரும்புகின்றனர். ஆனால் வழக்கம் போல் ரோகிணி அப்பா ஜெயிலில் இருக்கார், என்று சமாளிக்கிறார்.

ஆனால் விஜயா விடாமல் `உன் மாமா கிட்ட கேளு’ என்று சொல்ல, அனைவர் முன்னிலையிலும் ரோகிணி தன் தோழிக்கு போன் போட்டு பேசுகிறார். போன் கைத்தவறி கீழே விழ ரோகிணி பதறி போய் அதை கையில் எடுக்கிறார். மீனா அவருக்கு உதவி செய்ய அருகில் சென்றதும், ரோகிணி கையைத் தட்டி விடுகிறார். மீனவுக்கு ஏதோ தவறு நடக்கிறது என்பது புரிகிறது.

அனைவரும் அங்கிருந்து சென்றதும், முத்துவிடம் `ரோகிணி அவங்க மாமாகிட்ட பேசலைங்க, அவங்க பொய் சொல்றாங்கன்னு தோணுது’ என்று சொல்கிறார் மீனா.

Siragadikka aasai

முத்துவுக்கும், மீனாவுக்கும் பலத்த சந்தேகம் வந்துவிட்டது. மற்றொருபுறம் முத்து நியாயமான மனிதர் என்பதை ஸ்ருதி உணர்ந்து கொண்டதாக ரவியிடம் சொல்கிறார். ரவியும் மனோஜ் மட்டும் தான் வீட்டில் சுயநலமாக நடந்துகொண்டு, அப்பாவைக் கஷ்டப்படுத்துகிறார் என்கிறார்.

ஸ்ருதி முத்துவைப் பற்றிச் சொல்கையில், நீங்க எல்லாம் படிச்சீங்க, ஆனா முத்து படிக்கல, அதனால அவர் சில இடங்கள்ல கோவத்த எப்படி காட்டணும்னு தெரியாம வெளிப்படுத்துறாரு. ஆனா அவர் நியாயமா நடந்துக்குறாரு என்று பாராட்டுகிறார். ஸ்ருதி,மீனா, முத்து , ரவி காம்போ ரசிக்க வைக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் மனோஜ், ரோகிணி செய்த திருட்டுத்தனங்கள் வெளி வரும் என்பதால் அடுத்த வாரம் விறுவிறுப்பாக நகரும்.

BB Tamil 8: "எப்படி ராணவ் கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்க?" - வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி

இந்த வார செங்கல் டாஸ்கில் ராணவும், ஜெஃப்ரியும் மல்லுக்கட்டி உருண்டதில் ராணவ்விற்குத் தசைநார் கிழிவு ஏற்பட்டது.கீழே விழுந்து தோள்பட்டை வலியால் துடிக்கும் ராணவ்வைப் பார்த்து அன்ஷிதா, ஜெஃப்ரி, சவுந்தர்யா... மேலும் பார்க்க

அந்த வீடியோவால வெளியில தலைகாட்ட முடியல - சீரியல் நடிகர் துரைமணி

சன் டிவியில் 'மருமகள்' ஜீ தமிழ் சேனலில் 'வள்ளியின் வேலன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் துரைமணி. விஜய் டிவியில் 'பாவம் கணேசன்' தொடரிலும் நடித்திருந்தார். நடிப்பு தவிர, சீரியலுக்கு எடிட்டிங் ஸ்டூடி... மேலும் பார்க்க

Bigg Boss 8: ``சௌந்தர்யாவின் அம்மா அப்பா அழுதுட்டிருக்காங்க"- சௌந்தர்யா தோழி நந்தினி

பிக்பாஸ் சீசன் 8 முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் நிகழ்ச்சியில் கடைசிக் கட்ட விறுவிறுப்பைப் பார்க்க முடிகிறது. இன்று வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிற சூழலில், யார் யார... மேலும் பார்க்க

BB Tamil 8: "செம்மையா நடிக்குறாங்க, பச்சையா நடிக்குறாங்க"- யாரைச் சொல்கிறார் விஜய் சேதுபதி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 76 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாகச் செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றன... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 75: வன்மத்தைக் கொட்டிய அன்ஷிதா; திருப்பி அடித்ததா முத்துவின் தியாக டிராமா?

இந்த எபிசோடில் பிக் பாஸ் தந்த டிவிஸ்ட் இதுவரை தந்தவற்றில் எல்லாம் பெரியது. ‘உங்க விளையாட்டை உங்களோட வெச்சுக்கங்க.. என் கிட்ட கேம் ஆடாதீ்ங்க. நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற மாதிரி முத்... மேலும் பார்க்க

Serial Update: வரிசையாக வெளியேறும் நடிகர்கள்; `சந்தியா ராகம்' சீரியலில் என்ன நடக்குது?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `சந்தியா ராகம்' தொடரிலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் வெளியேறுவது சின்னத்திரை வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது.சந்தியா ராகம் நடிகர் நடிகைகள்'சந்தியா ராகம... மேலும் பார்க்க