செய்திகள் :

Siragadikka Aasai: மீனா மீது விழுந்த திருட்டுப் பழி; ரோகிணி போட்ட திட்டம் சக்சஸ்!

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோட் கலகலப்பாக இருந்தது. ஆனால் எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோ சோகத்தை ஏற்படுத்தி விட்டது. நேற்றைய எபிசோடில் வாழைப்பழ நகைச்சுவையைப் போலச் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லி வீட்டிலிருந்தவர்களை டென்ஷன் செய்தார் மனோஜ்.

விளம்பரத்தில் நடிக்க ஆளுக்கு 25,000 ரூபாயை சந்தோஷி சார் கொடுத்ததை வீட்டில் மறைத்தார் மனோஜ். அதற்கான புலன் விசாரணை வீட்டில் நடந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கேள்விகளைக் கேட்க, ‘ஷூட்டிங் முடிந்ததும் தரலாம்னு இருந்தேன்’ என்ற ஒற்றை டயலக்கையே ரிப்பீட் மோடில் சொல்லிக் கொண்டிருந்தார் மனோஜ்.

Siragadikka aasai

கடைசியாக அண்ணாமலையையும் டென்ஷன் செய்தார். இறுதியாக, ஒவ்வொருவருக்கும் தலா 25,000 பணத்தை அனுப்பினார்கள் மனோஜ்-ரோகினி ஜோடி. விஜயாவுக்கு 15000 ரூபாய்தான்.

ஏனெனில், நேற்றிரவே பத்தாயிரம் கொடுத்துவிட்டேன் என்கிறார் மனோஜ். பணத்தை வாங்கியதை ஏன் என்னிடம் கூறவில்லை என்று அண்ணாமலை கேட்க, 'ஷூட்டிங் முடிந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்’ என மனோஜ் ரூட்டை பிடித்தார் விஜயா. அட போங்கய்யா என்று அனைவரும் எஸ்கேப் ஆனார்கள்.

காருக்கான மாத தவணையைச் செலுத்த முத்து செல்கிறார். அவருக்கு முன்பாகவே பணத்தை மீனா செலுத்தியிருப்பார். விளம்பரத்தில் நடித்து வந்த பணத்தைக் கொடுத்ததாகக் கூறுவார் மீனா. பின்னாடியே, அண்ணாமலையும் முத்துவுக்காக பணம் செலுத்த வருவார். இந்த சம்பவத்தால் நெகிழ்ந்து போகிறார் முத்து.

பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்கச் செல்கிறார் மீனா. அங்கு நடனப் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜயா. அப்போது, பூ கொண்டு வரும் மீனாவை வழக்கம் போல அனைவரின் முன்பும் அவமானப்படுத்துகிறார் விஜயா.

மீனா கொண்டுவந்த பூவிற்காகப் பார்வதி காசு கொடுக்க வரவும், 'மீனா காசை வாங்க மாட்டாள், பறித்துக் கொண்டு தான் போவாள்' என்று சொல்வார் விஜயா. உடனே, ‘நீயே கஷ்டப்பட்டு வேலை செய்யுற, காசு வாங்கிக்கோமா’ என்கிறார் பார்வதி. அப்போது, ‘எங்களுடைய கஷ்டம் எங்களை விட்டுப் போகாது’ என வருந்துவார் மீனா.

Siragadikka aasai

மழை வருவதாகப் பார்வதி கூறவும், மாடியில் இருக்கும் துணியை எடுத்து மடித்து வைக்கச் சொல்கிறார் விஜயா. மீனாவும் அதைச் செய்துவிட்டுக் கிளம்புகிறார். அப்போது, விஜயாவின் மாணவி ரதியின் அம்மா புடவை விற்க வருகிறார். மூன்று புடவை 45 ஆயிரத்துக்கு வாங்க நினைக்கிறார். அதற்காகக் காசை எடுக்க மாடிக்குச் செல்கிறார் பார்வதி.

இப்போதுதான், காசு காணாமல் போனது இருவருக்கும் தெரிய வருகிறது. மீனாதான் எடுத்திருப்பாள் எனும் முன்முடிவுக்கு வருகிறார் விஜயா. `மீனா என் காசைத் திருடிவிட்டாள்' என விஜயாவால் வீட்டில் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், காசு எப்படி வந்தது எனும் கேள்வி வரும் என்பதால், பார்வதியின் காசு தொலைந்து விட்டதாகவும், மீனா வீட்டுக்கு வந்ததாகவும் விஜயா போனில் பேசுகிறார். இதனை முத்துவும் மீனாவும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். அந்த புரோமோவுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

ரோகிணி தான் பணத்தை எடுத்தார் என்பதை முத்து கண்டுபிடிப்பாரா? மீனா இந்த வீண்பழியை எப்படிச் சமாளிப்பார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Rajini - Super Singer : `ரஜினி ஹிட்ஸ்' - சூப்பர் சிங்கரில் ரஜினி கொடுக்கவிருக்கும் அந்த கிஃப்ட்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது.6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மேடையில் தங்... மேலும் பார்க்க

BBTAMIL 8: DAY 57: ஓப்பன் நாமினேஷன்; எவிக்ஷன் பயத்தில் தவிக்கும் சாச்சனா; மஞ்சரிக்கு வந்த சோதனை!

இந்த வாரத்தின் கேப்டனாக ஜெப்ரி தேர்வானார். சவுந்தர்யா, அன்ஷிதா உள்ளிட்ட பலரும் இதனால் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சாச்சனாவிற்கு கிடைக்காததற்காக ஜாக்குலின் வருத்தப்பட்டார். அதுவொரு பாவனையா? ஜெப்ரி ஆட... மேலும் பார்க்க

BB Tamil 8: இந்த வாரதிற்கான கேப்டன்ஷிப் டாஸ்கிற்கு மோதிக்கொண்ட ஜெஃப்ரி, சாச்சனா- வென்றது யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 57 நாட்களைக் கடந்திருக்கிறது.18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.... மேலும் பார்க்க

Bigg Boss: 'பிக்பாஸ், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?' - இந்தி பிக்பாஸில் கலக்கும் `போல்டு’ ஸ்ருதிகா

நடிகர் தேங்காய் சீனிவாசனோட பேத்தி, நடிகர் சூர்யாவோட 'ஶ்ரீ' படத்துல ஹீரோயினா அறிமுகமானவர், குக் வித் கோமாளி அப்படிங்கிற அடையாளங்களோட இதுநாள் வரைக்கும் பார்க்கப்பட்டு வந்த ஸ்ருதிகாவை, அவர் இந்தி பிக்பாஸ... மேலும் பார்க்க

BB Tamil 8: நாமினேட் ஆன முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஷிதா; இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸின் 57-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்றைய புரோமோவில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைச் சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லணும் என்று பிக் பாஸ் கூறுகிறார... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai : ஒரு ஊரே கயலை எதிர்ப்பது ஏன்? | மலேசியா மாமாவால் ரோகிணிக்கு ஆபத்து?

கயல் சீரியலில் பொதுவாக யார் கடத்தப்பட்டாலும் எழில் தான் அவர்களை மீட்பார். ஆனால் இம்முறை எழிலையே கடத்திவிட்டார்கள். எனவே அவரை மீட்க கயல் என்ன செய்யப் போகிறார் என்பது தான் சஸ்பன்ஸ்.கயல் திருமணம் முடிந்த... மேலும் பார்க்க