முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
Sivakarthikeyan: "சினிமாவின் மீதான அவரது காதல் என்றென்றும் தொடரட்டும்..." - கமல்ஹாசன் வாழ்த்து
நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்தநாள் இன்று.
`அமரன்' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.கே நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு `பராசக்தி' திரைப்படத்தின் பி.டி.எஸ் காணொளியைப் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு `மதராஸி' எனத் தலைப்பை வைத்து, டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.
பிறந்த நாளுக்கு கமல் ஹாசன் சிவகார்த்திகேயனை வாழ்த்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ``தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் எனப் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற `அமரன்' திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழாவில் கமல் ஹாசன், `` படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னைச் செதுக்கிக் கொண்டார். உடலை ஏற்றுவது என்பது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்து கொண்டு உழைத்திருந்தார். `ஊதா கலர் ரிப்பனா இது, இப்படி உடலை ஏற்றியிருக்கிறார்' என என்னை ஆச்சரியப்படுத்தினார். நான் அட்வான்ஸ் கொடுக்கும்போது இருந்த சிவகார்த்திகேயன் வேறு. படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் வேறு" எனப் புகழாரம் சூட்டியிருந்தார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play