செய்திகள் :

Skin Care @ Home: வீட்டுக்குள்ளேயே ஒரு பியூட்டி பார்லர்!

post image

ஆரோக்கியமாக, அழகான முக சருமத்துக்காக, விளம்பரங்களில் விதவிதமாகக் காட்டப்படும் கிரீம், லோஷன் பயன்படுத்தி, தோலின் இயற்கைத் தன்மையை இழக்க வேண்டாம். பார்லர் போய் பணத்தை விரயம் செய்ய வேண்டாம். நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே அழகைப் பராமரிக்கலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் நர்மதா.

 ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்

சூரியனின் கடுமையான தாக்கத்தால் சருமம் கறுப்பாகும். 250 மி.லி ரோஸ் வாட்டரில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் பால், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துப் பசை போன்று நன்கு கலக்க வேண்டும். கை, கால், முகம், கழுத்தில் பூசி, 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் தூங்கும் முன்னர் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

நன்கு பழுத்த சிறிய பப்பாளிப் பழத்தைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, நன்கு மசித்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, இரவு தூங்கும் முன்னர் கை, கால், முகத்தில் பூசி, 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை, வாரம் மூன்று முறை செய்யலாம்.

 Face Glow
Face Glow

ஒரு கப் தயிரில், ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை நன்கு கலக்க வேண்டும். அதை முகம், கை, காலில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். காலை குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் செய்துவிட்டுக் குளிக்க வேண்டும். தினமும் செய்துவந்தால், இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

தூங்கச் செல்லும் முன், கற்றாழையை இரண்டாக வெட்டி, கை, காலில் தேய்த்து, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். காலையில், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்துவர, சருமத்தின் கருமை நிறம் மாறும்.

கற்றாழை பியூட்டி
கற்றாழை பியூட்டி

தங்க நகை, கவரிங் நகை போடுவதால் சிலருக்குக் கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு, கறுப்பாகும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு ஹார்மோன் பிரச்னையினாலும் நிறம் மாறும். ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்து, அரைத்துப் பொடியாக்கி, அதனுடன் பால் சேர்த்து, தினமும் கழுத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவி வந்தால், கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும்.

எலுமிச்சைச் சாற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து, கழுத்தில் பூசி, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு, ஒரு மாதம் செய்வது நல்லது.

 beauty tips
beauty tips

தேன் நல்ல மாய்ஸ்ச்சரைசர். தக்காளியில் உள்ள அமிலம் கருமை நிறத்தை மாற்றக்கூடியது. தக்காளியை நன்கு பசைபோல் அரைத்து, தேன் கலந்து, கருமை உள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இப்படிச் செய்துவந்தால், கருமை நீங்கிப் பளிச்சிடும்.

வயது அதிகரித்தல், தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, மன அழுத்தம் போன்றவற்றால் கண்களைச் சுற்றிலும் கருவளையம் தோன்றும். வெள்ளரிச் சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் கலந்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களுக்கு மேல்வைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். தினமும் செய்துவர, ஒரு வாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

Eye care
Eye care (Representational Image)

பாதாம் ஆயில் மற்றும் தேனைச் சம அளவு எடுத்து, நன்கு கலக்க வேண்டும். இதைக் கண்களைச் சுற்றிப் போட்டுவந்தால், கருவளையம் நீங்கும்.

ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் உடன், ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். கருவளையம் நீங்கும்.

lip care
lip care

புற ஊதாக்கதிர் வீச்சு, புகைபிடித்தல், தவறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல், அதிக அளவில் டீ மற்றும் காபி குடித்தல், தோல் ஈரப்பதம் போன்றவற்றால் உதடுகள் கருமை ஆகின்றன.

கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, உதட்டில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்தபின், பருத்திப் பஞ்சால் துடைத்து எடுக்க வேண்டும். இது உதட்டின் கருமையை மாற்றும்.

உதவி ஆய்வாளரின் அறிவுரையால் தலை முடியை திருத்திய மாணவர் - புதுக்கோட்டை சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது... மேலும் பார்க்க

Summer Skin Care டிப்ஸ்: தயிர், தேன், தேங்காய்ப்பால்.. சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?

''கோடை காலத்தில் சருமம் தடித்துக் காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே சரும வறட்சி (Dry Skin) இருக்கும். கோடையில் அவர்களது நிலைம... மேலும் பார்க்க

Dandruff: `பொடுகு அதிகமா இருக்கா?' தலைக்கு எண்ணெய் வைக்கலாமா; மருத்துவர் சொல்வெதன்ன?

பெரும்பாலானோருக்குத் தலையில் பொடுகு அதிகமாக இருக்கும். உச்சந்தலையில் ஏற்படும் இந்தப் பிரச்னை மலாசீசியா எனப்படும் பூஞ்சையின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இரண்டு ... மேலும் பார்க்க

Sunscreen: இந்த சம்மருக்கு உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?!

இன்றைய தலைமுறையினர் தங்களது சருமங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஸ்கின் கேரை பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே தங்களது சர்மங்களை பாதுகாக... மேலும் பார்க்க

Tretinoin: டிரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் கிரீம்; மருத்துவர் எச்சரிப்பது என்ன?

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் க்ரீம், எப்படிச் சாதாரண மக்கள் மத்தியிலும் இன்ஃப்ளூயன்சர், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பரிச்சயமானது. எதற்காக இவ்வளவு ஹைப் கொடுக்கிறார்கள், இந... மேலும் பார்க்க

Ever youth: வயசானாலும் உங்க இளமை குறையாமல் இருக்க 15 டிப்ஸ்..!

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? டோன்ட் வொர்ரி... முதுமையைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார், சென்னை அரசு யோகா மற்று... மேலும் பார்க்க