செய்திகள் :

Sleep: ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சில உணவுகள்!

post image

தூக்கம்... எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாதது. மன உளைச்சலாலும் வாழ்வியல்முறை மாற்றங்களாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் இன்றைய சூழலில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது என்பது அரிதாகிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்துக்கு இனி ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. சில உணவுகளுக்கு நல்ல தூக்கம் தரும் தன்மை உண்டு என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

பால்
பால்

இரவு தூங்கச் செல்லும் முன் இளஞ்சூடான பாலைக் குடிக்கலாம். பாலில் உள்ள டிரிப்டோஃபன் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் மூளையிலுள்ள செரட்டோனின் (Serotonin) என்னும் நரம்பியக்கக் கடத்திகளைத் தூண்டுகிறது. அத்துடன் தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோனின் (Melatonin) எனப்படும் ஹார்மோனையும் அதிகரிக்கிறது. இதனால் இரவு முழுவதும் ஆழ்ந்து உறங்கலாம்.

சிலருக்கு நடுஇரவில் பசியெடுப்பதால் தூக்கம் பாதிக்கப்படும். அவர்கள் இரவு உணவுக்குப் பின்பு நான்கு பாதாம் சாப்பிட்டால் நிறைவுத் தன்மை கிடைக்கும். அத்துடன், இதிலுள்ள அமினோ அமிலம் மற்றும் மக்னீசியம் தசைகளைத் தளர்வாக வைத்திருப்பதால் நிம்மதியான தூக்கம் வரும்.

பாதாம்
பாதாம்

பெரும்பாலான மக்கள் காலையில் ஓட்ஸ் கஞ்சியைக் குடித்தால் அன்றைய நாள் முழுவதும் வெண்பொங்கல் சாப்பிட்டதுபோல மந்தமாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? உண்மைதான். ஓட்ஸ் மெலட்டோனின் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்வதுடன் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு சிறிய கப் ஓட்ஸ், ஒரு கிளாஸ் பால், அரை டீஸ்பூன் தேன் சேர்த்து இரவு உணவுக்குப் பதிலாகச் சாப்பிட்டுப் பாருங்கள். காலையில் தூக்கக் கலக்கம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பீர்கள். தேன், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து மூளையைத் தளர்வாக வைத்திருக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவதாலும், வைட்டமின் சி நிறைந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிடுவதாலும், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதாலும் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆரஞ்சு, கீரை வகைகள், புரோக்கோலி, புதினா, குடமிளகாய், முட்டைகோஸ், பட்டாணி போன்ற உணவு வகைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்வது தூக்கத்துக்கு நல்லது.

காய்கறிகள்

முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட சிக்கன், சுண்டல் போன்ற புரதம் நிறைந்த உணவுகளில் டிரிப்டோஃபன் நிறைந்துள்ளதால், இவையனைத்தும் தூக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும். அதேநேரத்தில் இத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது அவசியம். ஏனெனில், கார்போஹைட்ரேட் இன்சுலின் வெளியீட்டை ஊக்கப்படுத்துகிறது. இது, ரத்த ஓட்டத்திலிருந்து தேவையற்ற அமினோ அமிலங்களை வெளியேற்றி, டிரிப்டோஃபன் அமினோ அமிலத்தை மூளைக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது.

* தூங்கச் செல்வதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே காபி அல்லது டீ குடித்துவிட வேண்டும். இல்லையென்றால் வழக்கமாகத் தூங்கும் நேரத்தைக்காட்டிலும் தாமதமாகத்தான் தூக்கம் வரும்.

* இரவில் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை செரிமானக் கோளாறுகளை உண்டாக்குவதோடு, உடலின் தட்பவெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும். இதனால், தூக்கம் தடைப்படுmம்

* மது, உடலின் நீர்த்தன்மையைக் குறைப்பதோடு தூக்கச் சுழற்சியையும் பாதிக்கும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,B... மேலும் பார்க்க

Weight Management: உடல் எடையை குறைக்கும் 6 எளிய பாரம்பர்ய உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் உணவுகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்ப... மேலும் பார்க்க