அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்
Soori: 'நீங்கள் எதிர்பார்ப்பது...'- 2026 தேர்தல் பிரசாரம் குறித்து சூரி சொன்னது என்ன?
‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்கிய மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் - சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடிக்க, ராஜ்கிராண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் மாமன் படத்திற்கான வரவேற்பு குறித்து பேசியிருக்கிறார். “மாமன் படம் உணர்வு ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை இது போன்ற வெற்றி படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவனாக 'மாமன்' படம் மூலம் சென்றடைந்திருக்கிறேன். படம் மக்களைச் சென்றடைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
குடும்பம், குடும்பமாக வந்துப் படத்தைப் பார்ப்பது எனக்கு மகிழ்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து மண்ணின் மைந்தனாக மதுரை தேர்தல் பிரசாரக் களத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்த சூரி, “ மண்ணின் மைந்தனாக சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன். சினிமாவில் என்னைத் தக்க வைக்கணும். அதற்கான வேலையை நான் செய்யவேண்டும். நீங்கள் எதிர்பார்ப்பது எப்போது என்று எனக்கு தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...