ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
South Korea: விமானம் விபத்து; 62 பேர் பலி... மீட்புப் பணிகள் தீவிரம்.. பதற வைக்கும் வீடியோ
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்ககும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் '2216' வகை விமானம் ஒன்று, தாய்லாந்திலிருந்து கிளம்பி இன்று (டிச 29) காலை 9 மணி அளவில் தென் கொரியாவின் மூயான் (Muan) சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நிற்காமல் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்த அந்த விமானம், விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதி தீப்பற்றி வெடித்துள்ளது. இந்த விமானத்தில் 175 பேர் பயணிகளும், 6 விமான ஊழியர்களும் என மொத்தம் 181பேர் பயணித்துள்ளனர்.
இந்த எதிர்பாராத திடீர் விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. உயிரிழப்பின் எண்ணிக்கை 47 வரை அதிகரித்திருப்பதாக தற்போதையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பறவை மோதியதால் விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததுள்ளாதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விமான விபத்திற்கானக் காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்டுகள் வெளியாகவில்லை.
இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.