செய்திகள் :

Stalin: "துறையும் வளர்ந்திருக்கு; உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்" - ஸ்டாலின் பெருமிதம்

post image
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நேற்று (அக்டோபர் 24) சென்னையில் நடைபெற்றது.

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அவர், "முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கியதில் மகிழ்ச்சி. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

stalin

விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு. விளையாட்டுத்துறையைச் சிறப்பாகக் கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தம்பி உதயநிதி. துறையும் வளர்ந்திருக்கிறது, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை

தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக செஸ் ஒலிம்பியாட் அமைந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தைத் தருகிறது. விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு விளையாட்டுத் துறை பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள தங்களின் குழந்தைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்குத் திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இட... மேலும் பார்க்க

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க