செய்திகள் :

Surya Sethupathi: `நேப்போ கிட்’ தொடர்பான கேள்விக்கு நிதானமாக பதிலளித்த சூர்யா சேதுபதி

post image

இந்தியாவில் 'வாரிசு அரசியல்' விவகாரம் பேசுபொருளானது போல சினிமா துறையிலும் பேசுபொருளானது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதியின் முதல் படமான 'பீனிக்ஸ்' வெளியாகுவதற்கு முன்பே 'நெப்போடிசம்' என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், நிகழ்ச்சி தொகுப்பாளர், "ஒரு நேப்போ கிட் என்ற முறையில், நீங்கள் உங்கள் அப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டுமே" எனத் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி - சூர்யா சேதுபதி

அதற்கு அவர் அளித்த பதிலில், ``ஒருவரை நேப்போ கிட் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதாவது நேப்போ கிட் என்றால் உங்கள் தந்தைக்கு ஏதோ ஒரு மரபு இருந்தது என்று அர்த்தம், இல்லையா?. பொதுவான ஒருவர் புதிதாக ஒன்றைத் தொடங்குகிறார் என்றால், ஒரு நேப்போ கிட் அவரின் அப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டும்.

அந்த உழைப்பை செலுத்துவதற்கும் தடை இருக்கிறது, அதைக் கடக்க போராட வேண்டியிருக்கும். ஆனால் அந்தப் போராட்டங்கள் உங்களுக்கு நிறைய விஷயங்களை கற்பிக்கும். சிறுவயதிலிருந்தே கஷ்டங்களைச் சந்தித்து இங்கு வந்துள்ளேன்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `முதல்வர் இருந்த மேடையில் `ஓல்ட் ஸ்டூடண்ட்’னு பேசினேன்; இப்போ வரும்போதே.!’ - கலகலத்த ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான்; இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை’ - ரஜினி