TATA: ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய CEO-வாக நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இந்த P.B.பாலாஜி?
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 32 ஆண்டுகளாக ஆட்ரியன் மார்டல் என்பவர் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக பணியாற்றி வருகிறார். ஆட்ரியன் மார்டல் விரைவில் ஓய்வு பெற இருப்பதால் புதிய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதத்தில் இருந்து CEO பணியைத் தொடங்குகிறார்.

P.B பாலாஜி, சென்னை ஐஐடி மற்றும் IIM கொல்கத்தா-வில் கல்வி பயின்றவர். அவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உலகளாவிய அனுபவம் உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் வாடிக்கையாளர் பொருள்கள் (FMCG) துறைகளில் நல்ல அனுபவமும் திறமையும் உள்ளவர்.
சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.

இதுகுறித்து பிபி. பாலாஜி பேசுகையில், "இந்தச் சிறந்த நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமையான ஒன்று. கடந்த 8 ஆண்டுகளில் ஜாகுவார் லேண்ட் ரோவர் மீது எனக்கு அதிக நெருக்கம் உருவானது. மேலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் நானும் என் குழுவும் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...