வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு
Thandakaranyam: ``இந்தப் படத்துல எனக்கு அக்கா, அந்தப் படத்துல எனக்கு ஜோடி" - நடிகர் கலையரசன்
இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சில் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கலையரசன், ``என் திரையுலகில் மிகவும் முக்கியமானப் படமாக இந்தப் படம் இருக்கும். பழகுவதற்குக் குழந்தைப்போல இருக்கும் இயக்குநர் அதியன் தோழர் சிறப்பாக இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கும்போதே மிகச் சிறப்பாக இருந்தது. அதை அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார். எனக்கும் தினேஷுக்கும் அட்டக்கத்தி ஆரம்பித்த நடிப்பு மோதல் இப்போதுவரை தொடர்கிறது.
மெட்ராஸ் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த ரித்விகா இந்தப் படத்தில் என் அண்ணியாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் நாங்கள் ரொமான்ஸ் செய்வதை கார்த்தி பார்த்துவிடுவார்.
இந்தப் படத்தில் என் அண்ணனும் அண்ணியும் ரொமான்ஸ் செய்வதை நான் பார்த்துவிடுவேன். இந்தச் சூழலில் நடிப்பது மிகவும் சிரமான விஷயம். இதில் எப்படி நடிப்பது எனத் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
இந்த வேட்டுவம் படத்தில் எனக்கு மனைவியாக நடிக்கும் மெலடி இந்த படத்தில் எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடித்து, வேட்டுவம் ஷூட்டிங் சென்றபோது மெலடியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி. `நீங்க இங்க என்ன பண்றீங்க அக்கா'னு கேட்டா, 'இந்தப் படத்துல நான்தான் உனக்கு ஜோடி'னு சொல்றாங்க.
அதிலும் முதல் காட்சி ரொமான்ஸ் காட்சிதான். எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாருங்க. படம் எடுக்கும் போது இருக்கக்கூடிய பிரச்சனைகளை விட, படம் எடுத்தற்குப் பிறகு அதை வியாபாராமாக்குவது பெரும் பிரச்னை.
என்னை வைத்து படமெடுத்த இயக்குனருக்கு ஒரு கோடி பிரச்னைகள். இது எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். நீலம் தயாரிக்கும் படம் என்றாலே சிறப்பாக இருக்கும். மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரவேற்பு இந்தப் படத்துக்கும் கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...