செய்திகள் :

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

post image

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!

*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 10 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரவு கனமழையிலும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே உறுதியுடன் போராடி வருகின்றனர். (முழுவிவரம்)

*இன்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த வன்னியர் சங்கம் சார்பிலான மகளிர் மாநாட்டில், 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது' என்று அன்புமணியைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் ராமதாஸ். மேலும், 10.5% உள் இட ஒதுக்கீட்டை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது என்றும் பேசியிருக்கிறார். (முழுவிவரம்)

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்

* பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 'Zero Defect, Zero Effect' என்ற கொள்கையில் இந்தியாவை தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். (முழுவிவரம்)

*பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது. (முழுவிவரம்)

*புதுச்சேரியில் விடிய விடிய போதை பார்டிகள் நடத்திக்கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பார்கள் செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் பார்கள் மீது காவல், கலால் துறை இரண்டுமே நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாகவும் புதுவை மக்கள் பரபரப்பானக் குற்றச் சாட்டுக்களைக் கிளப்பியிருக்கின்றனர். (முழுவிவரம்)

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

*இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், தான் மிகப்பெரிய ரஜினி ரசிகர் என்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது தியேட்டரை தேடிக்கண்டுபிடித்து ரிஸ்க் எடுத்துத் தனியாக ரஜினி படம் பார்த்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். (முழுவிவரம்)

* ட்ரம்பும், புதினும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள அலஸ்காவில் சந்தித்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின், 50% வரி விதிப்பால் பாதிக்கப்பிற்குள்ளாகும் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

*இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். (முழுவிவரம்)

* விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், 'எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாகவும், அவருடைய முயற்சியாகவும் உள்ளது' என எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சிற்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார். (முழுவிவரம்)

*திண்டுக்கலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கும் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த், "வயது முதிர்வின் காரணமாக அரசியலுக்கு வரவில்லை. துறையின் உச்சத்தில் இருந்து தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இன்று நேற்று மக்கள் சேவை செய்ய ஆரம்பிக்கவில்லை கடந்த 32 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு உதவி செய்து வந்தார்" என பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க