செய்திகள் :

Travel Contest: இது உலகின் சொர்க்கம்ப்பா! Switzerland-ஐ சுற்றிப் பார்க்க எவ்வளவு செலவாகும்?

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

உலகின் சுவர்க்கம் என்று பலகாலமாக அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து என்பதைத் தற்கால வாண்டுகள் கூட அறியும். மலைகளும் ஏரிகளும் நிறைந்த மகிழ்வான நாடு இது.

ஒரு காலத்தில் நம்மைப் போன்ற வளரும் நாட்டு மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த சுவிட்சர்லாந்தை, இன்றைக்கு எட்டும் கனியாக மாற்றி வைத்துவிட்டது விஞ்ஞான மற்றும் பொருளாதார முன்னேற்றம். நாமும் சென்று பார்த்து வரக்கூடிய நாடாக அது இப்போது உள்ளது.

’மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது!’ என்ற நம் தமிழ் வாசகத்திற்கு உதாரணமாக இந்நாட்டைச் சொல்லலாம்.

மிகச் சிறிய நாடான இது. கிழக்கு மேற்கில் சுமார் 350 கிலோ மீட்டரும்,வடக்கு தெற்கில் 220 கிலோ மீட்டரும் கொண்டது.

Lauterbrunnen, Switzerland

மக்கள் தொகை ஒரு கோடிக்குள்தான்!

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்தக் குட்டி நாடு நிதி மற்றும் வங்கிகள் துறையில் அதி முன்னேற்றம் கண்டது. சாக்லட் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது.

சேவைத்துறை (services sector) மற்றும் சுற்றுலாக்கள் மூலம் அதிக வருமானம் பெறும் இந்த நாட்டின் கரன்சி ‘ஸ்விஸ் ஃப்ராங்க்’ என்றழைக்கப்படுகிறது. ஈரோவும் புழக்கத்தில் உள்ளது.

ஆல்ப்ஸ் மலைத் தொடரின் உயரமான சிகரங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டு முழுவதும் பனியால் போர்த்தப்பட்ட சிகரங்களை இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து காஷ்மீர் என்றும், தமிழ் நாட்டின் சுவிட்சர்லாந்து ஊட்டி என்றும் அழைக்கப்படுவதிலிருந்தே இந்த நாட்டின் சீதோஷ்ண நிலையை உணரலாம். நமது தமிழ்நாட்டில் மார்ச்சிலேயே 35 டிகிரி அளவுக்கு வெப்பம் தகிக்க
ஆரம்பித்து விடும்.

மே மாதத்தை நினைக்கையிலேயே வியர்க்கிறது. ஆனால் சுவிஸ்ஸின் வெப்பநிலை கோடையில் கூட 25-30 டிகிரிக்குள்தான்.

குளிர் காலங்களில் மைனசில் செல்லும். இருப்பினும் வீட்டிற்குள் இருக்கையில் அவ்வளவாகக் குளிர் தெரியாது.

Grimentz, Switzerland

வீடுகளின் அமைப்பு அப்படி. மேலும், ஹீட்டர் வசதிகளும் உண்டு. இங்குச் செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணியர் நகரங்களை ஒதுக்கி விட்டு, கிராமங்களிலேயே தங்குவர். அதற்குக் காரணம் இயற்கையின் பேரழகை அருகிருந்து ரசிப்பதற்காகத்தான்.

நாள்பட்ட நோய் (chronic diseases) கொண்டவர்களுக்கு, மருத்துவர்கள் சுவிஸ் சென்று ஓய்வெடுத்து வர ஆலோசனை கூறுவர். அதற்குக் காரணம் நல்ல சீதோஷணம், தூய காற்று, அமைதி தவழும் இடங்கள் ஆகியவைதான்.

மேலும் அங்குள்ளவர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களை, பீக் பீரியடில் தவிர்த்து, அதிகக் கூட்டமின்றி பார்த்துக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக உள்ளனர்.

நமது நாட்டில் வெப்பம் அதிகரிக்கையில், வசதி-வாய்ப்பு உள்ளவர்கள் சுவிஸ் சென்று தங்கி, அனுபவித்து வரலாம். சரி!அங்குச் சென்று வர என்னென்ன தேவை என்று பார்ப்போமா?
 

 - நமது நாட்டு பாஸ்போர்ட், அடிப்படைத் தேவை;
  -அப்புறம் அந்த நாட்டிற்குள் செல்ல விசா;
  -சென்று திரும்ப விமான டிக்கெட்டுகள்;
  -அங்குத் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், சுற்றிப் பார்க்கவும் தேவையான ஸ்விஸ் ஃப்ராங்க்/ஈரோ; மற்றும் 
  -எத்தனை நாட்களில், எந்தெந்த இடங்களைப் பார்க்கப் போகிறோமென்ற தெளிவான திட்டம்.

இவற்றைச் சற்று விரிவாய்ப் பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்தில் நான் பலமுறை வந்து பல மாதங்கள் தங்கியிருந்தாலும், கடந்த முறைதான் ‘பூக்ஸ்’ (Booggs) பண்டிகை நேரத்தில் இங்கிருந்ததனால் அதனைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இது கோடையை வரவேற்று நடத்தப்படும் பெரும் விழாவாகும். `பூக்’ என்பது நமது போகியை ஞாபகப்படுத்துவதாலும், இரண்டுமே நெருப்பு சம்பந்தப்பட்டது என்பதாலும்,அதனைக் காண வேண்டுமென்ற உற்சாக நெருப்பு, உள்ளத்தில் பற்றிக் கொண்டது.

இரண்டு, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், சிறுவர்கள், பெரியோர், முதியோர் என அனைத்து மக்களும் மகிழ்ச்சிக் கூத்தாடி உற்சாகத்தில் திளைக்கிறார்கள்.

குழு, குழுவாக வண்ண ஆடைகளில் அவர்கள் ஊர்வலமாக வருவதைக் காண்கையிலேயே நம்முள்ளும் உற்சாகப் பெரு வெள்ளம், ஐப்பசி மாதக் காவிரியாகக் கரை புரண்டோட ஆரம்பிக்கிறது.

நகரின் முக்கிய இடத்தைத் தேர்வு செய்து, விசாலமான அந்த இடத்தில் ‘ஸ்நோ மேன்’ போன்ற வெண்ணிற பொம்மையை நம்மூர் குதிர் போன்ற அமைப்பை, காய்ந்த விறகுகளால் ஏற்படுத்தி, அதன் மேல் வைத்து விடுகிறார்கள்.

சொக்கப்பனை போன்ற அமைப்பு என்றும் சொல்லலாம். சாலைகளில் ட்ராம் மற்றும் பேருந்து, கார் போன்ற வாகனங்கள் செல்லத் தடை விதித்து விடுகிறார்கள்.

ஒரு தெளிவான திட்டம்:

  • உங்களுக்கான பாஸ்போர்ட் ஏற்கெனவே உங்களிடம் இருக்கும். இல்லையென்றாலும் ரூபாய் 1500-2000 செலுத்தி சுமார் ஒரு மாதத்திற்குள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • சுவிஸ் விசா, செங்கன் விசா (schengen visa) என்றழைக்கப்படுகிறது.

  • வயது வந்தவர்களுக்கு இதற்கான கட்டணம் ரூ 8100/- ஆறிலிருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அதில் பாதி. 6 வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கட்டணம் இல்லை.

  • விசா எவ்வளவு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டாலும் ஒருதடவை அதிகமாக 90 நாட்கள் மட்டுமே தங்க முடியும். இந்தக் கட்டணத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்.

Berninapass, Poschiavo, Switzerland
  • இந்த விசாவை வைத்துக்கொண்டு ஐரோப்பாவின் 29 நாடுகளுக்குச் சென்று வரலாம். விமான டிக்கெட்டுகள், ஏர்லைன்சுக்கு ஏற்ப சிறு மாற்றங்களுடன் காணப்படுகிறது.

  • தற்போதைய சூழலில் 60 லிருந்து 70 ஆயிரமாக உள்ளது. நம் தமிழ் நாட்டிலிருந்து செல்ல, அரபு நாடுகள் சென்று அங்கிருந்து வேறு விமானம் பிடிக்க வேண்டும்.

  • டெல்லி மற்றும்  மும்பையில் இருந்து மட்டும் சுவிசுக்கு நேரடி சர்வீஸ் உள்ளது. எப்படிச் சென்றாலும் சுமார் 10,12 மணி நேரம் ஆகி விடும். விமானப் பயணத்தின்போது
    வீல் சேர் உதவி (wheelchair assistance) உண்டு.

  • பயணச் சீட்டு புக் செய்யும்போதே இதனையும் குறித்து விட்டால், விமான நிலைய ஊழியர்களே நாம் செல்ல வேண்டிய விமானங்களுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இது இலவச உதவியே.

  • வயதானவர்களுக்கும், அதிகமாக விபரம் புரியாதவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். டிராவல் இன்சூரன்ஸ் எடுக்கவும் வேண்டும்.

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ‘ஹோம் ஸ்டே’யையே (Airbnb) விஷயம் தெரிந்தவர்கள் விரும்புகிறார்கள்.

தேவையான நாட்களுக்கு வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்குவது.

வீடுகளில் கிச்சன், ப்ரிஜ், வாஷிங் மெஷின், அயன் பாக்ஸ் என்று அனைத்து வசதிகளும் இருக்கும். ஏர் போர்ட்டில் இறங்கியவுடனேயே காரை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நாம் விரும்பிய இடங்களுக்குச் சென்று வரலாம்.

அந்த வீடுகளில் தங்கி, விருப்பமானவற்றைச் சமைத்தும் சாப்பிடலாம். இதற்கு இன்டர்நேஷனல் லைசன்சும், அந்தந்த நாட்டு சாலை விதிகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்!

சரி! சுவிட்சர்லாந்தில் எவற்றையெல்லாம் முக்கியமாகப் பார்ப்பது? ஒரு முக்கிய நகரத்தில் தங்கிக்கொண்டு பக்கத்தில் உள்ளவற்றைப் பார்த்து விட்டு, அடுத்த நகருக்கும் செல்லலாம். அல்லது ஒரே இடத்திலேயே தங்கிக்கொண்டு ரயில்கள், பஸ்கள் மூலம் பல இடங்களுக்கும் சென்று வரலாம்.

உதாரணத்திற்கு சூரிக்கில் தங்கி அருகிலுள்ள இடங்களுக்குக் காரிலும், சற்று தூரமான இடங்களுக்கு ரயிலிலும் சென்று வரலாம்.
- RHEIN FALL- ரீன் ஃபால்-நீர் வீழ்ச்சி-வேகமாக விழும் நீரை எதிர்த்து விசைப்படகில் சென்று விட்டு, அப்படகிலேயே ஆற்றில் ரவுண்டு அடித்து வருவது.

  • உட்லி பெர்க்-இந்த உயரமான இடத்திலிருந்து நகரின் முழு அழகையும் ரசிக்கலாம்.

  • நீண்ட, அகண்ட சூரிக் ஏரி! மக்களையும், கார்களையும் கூட ஏற்றிக்கொண்டு ஃபெரிகள் வந்து போவதை வேடிக்கை பார்த்தே நேரத்தை ஓட்டலாம்.

  • வட்டமடிக்கும் வகைவகையான வாத்துக்களும், எதிர்க்கரையில் படிப்படியாகத் தெரியும் வீடுகளும், அங்கு ஓடும் ரயில்களும் நம் கவனத்தை அதிகமாகவே ஈர்க்கும்.

சுவிசில் வீடுகளின் அமைப்பும்,வாழ்க்கை முறையும்!

      நமது நாட்டில் ‘மலை நாடு’என்று நமது கேரள மாநிலத்தை அழைப்போம். அங்கு மலைகளும், குன்றுகளும் அதிகமாக இருப்பதால். சுவிட்சர்லாந்தோ, உலகத்தின் உயர்வான மலைநாடு.

அந்த மலைகளை இயற்கை எழிலுடன் அப்படியே பாதுகாத்து, அதே சமயத்தில் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டுள்ள மக்களின் உழைப்பையும், அவர்களின் உன்னதப் புரிதலையும் கண்டு வியப்பே மேலிடுகிறது.

      பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, லீக்டன்ஸ்டீன் ஆகிய நாடுகளைத் தமது எல்லைகளாகக்கொண்ட சுவிசின் பரப்பளவு 41,285 ச.கி.மீ. மக்கள்தொகையோ 8.6 மில்லியன் (2019 கணக்கெடுப்பின்படி).

ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலியன், ரொமன்ஷ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பேசுகின்றனர். ஆங்கிலம் வணிகத்திற்கும், சுற்றுலாவுக்கும் மட்டுமே! நாட்டை 26 மண்டலங்களாகப்(cantons) பிரித்து நிர்வாகம் செய்கின்றனர்.

    மக்கள்தொகை குறைவாக உள்ளதாலோ என்னவோ, நிறைய வேலைகளுக்கு எந்திரங்களை உபயோகிக்கிறார்கள். மலையில் மின் கம்பம் நட ஹெலிகாப்டர் உபயோகித்ததையும், எதிரிலிருந்த வீட்டின் 5 வது மாடியிலிருந்து பொருட்களை இறக்க, தற்காலிக சாய்தள லிப்ட் பயன்படுத்தியதையும் இங்குதான் நான் கண்டேன்.

       மலைகளின் அழகு கெடாமல் அவற்றை அப்படியே வைத்து, வீடுகளைக் கட்டியுள்ளார்கள்; கட்டியும் வருகிறார்கள். நாங்கள் இரண்டாம் தளத்திலுள்ள வீட்டில்தான் வசிக்கிறோம் என்றாலும், சாலையிலிருந்து பார்க்கையில் ஐந்தாம் தளத்தில் உள்ளது போல் அவ்வளவு உயரத்தில் உள்ளது.

பெரும்பாலும் ஐந்தாறு மாடிகளைக் கொண்ட வீடுகளே அதிகம்.

நியூயார்க் போன்று வானளாவ வளர்ந்து நிற்கும், நூறு மாடிக் கட்டிடங்களை இங்குக் காண்பது அரிது. அது போலவே, நம் நாட்டில் உள்ளது போன்று மிகச் சிறு வீடுகளையும் இங்குக் காண முடியவில்லை.

வரவேற்பறை, சமையல் அறையுடன் 2, 3, 4 என்று பெட் ரூம்கள் கொண்ட வீடுகளே அதிகம். ஒவ்வொரு பிளாட்டிலும் 10, 15 வீடுகள் இருக்கின்றன. வீடுகளின் உள்ளேயே தனியாக ‘ஸ்டோர் ரூம்கள்’ உள்ளன.

ஒவ்வொரு பிளாட்டின் அடித்தளத்தில் ‘வாஷிங் ரூம்கள்’ உள்ளன. தேவைக்கேற்ப வாஷிங் மெஷின்களும், டிரையர்களும் உண்டு. பக்கத்தில் துணிகளை உலர்த்த இரண்டு பெரிய அறைகளும், ராட்சத ஃபேன்களும், காய வைக்கக் கம்பிக் கொடிகளும் உள்ளன.

எந்தக் குடும்பத்தினர் எந்தத் தேதியில் உபயோகிப்பது என்ற அட்டவணையையும் அங்கேயே ஒட்டி வைத்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் உபயோகித்த பிறகு அந்த மெஷின்களையும் அறைகளையும் சுத்தப்படுத்தி விடுகிறார்கள்.

அடித்தளத்தில் பழுதான, எப்போதோ உபயோகிக்கும் பொருட்களைப் பாதுகாக்க ‘செல்லார்’ என்ற சிறு அறைகளை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்கியுள்ளார்கள்.

அவை காற்றோட்டம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, நாம் விமானப்பயணம் மேற்கொள்கையில் பயன்படுத்தும் பெரிய சூட்கேஸ்கள் போன்றவற்றை இந்த செல்லார்களில் வைத்துக் கொள்ளலாம்.

அதனை ஒட்டி, குழந்தைகள் ஓட்டி விளையாடி மகிழும் சிறு சைக்கிள்கள், ’ஸ்ட்ராலர்’ என்றழைக்கப்படும் சிறு குழந்தைகளை வைத்துத் தள்ளும் வண்டிகள், பெரியவர்கள் பயன்படுத்தும் சைக்கிள்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்கப் பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கார்களை நிறுத்த வீட்டின் கீழேயே அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் லாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையிலும் கோடுகள் போட்டு, கார்களை நிறுத்த வழி செய்துள்ளார்கள்.

எந்தக் காரும், எந்தச் சமயத்திலும் கோடுகளைத் தாண்டி வெளியில் நிறுத்தப்படுவதில்லை. எங்கு, எப்போது காரை நிறுத்தினாலும் நாம் விரும்பும் நேரத்தில் எந்தத் தடங்கலும் இன்றி எடுக்கவும் முடியும்.

அடுத்தவர்களுக்குச் சிரமம் ஏற்படுத்துவதை இழிவாகக் கருதும் மனப்பக்குவத்தை இங்குள்ள அனைவருமே அடைந்திருப்பார்களோ?

      கிச்சனில் மின்சார அடுப்புகளே உள்ளன. அழுத்தமான கண்ணாடி அடைப்புக்குக் கீழே ஒளிரும் அவற்றைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். எந்த விதத்திலும் தீ விபத்துக்குச் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை.

  • ட்ரிட் அல்ட்மட் (Dritte Altmatt) சென்றால், தொங்கும் பாலத்தில் நடக்கலாம். கேபிள் கார்களில் ஏறி, உயரத்திலிருந்து உலகை ரசிக்கலாம்.

  • அங்கிருந்து ஜெர்மட், ரயிலில் சென்றால், ரயில் பயணத்தை அனுபவித்தது போலவும் ஆகும், மலையின் உச்சிக்குச் சென்று எதிரே தெரியும் மேட்டர் ஹார்னை(matter horn) ஐ ரசித்தது போலும் ஆகும்.

    இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாங்க! நம்மூரில் சில இடங்களில் மட்டுமே நின்று இயற்கையழகை ரசிக்கும் விதமாக ‘வியூ பாய்ண்ட்' அமைத்திருப்பார்கள். அங்கு நாம் எங்கு நின்று திரும்பினாலும் வியூக்கள்தாங்க!

சரி! பர்சில் எவ்வளவு எடுத்துச் செல்ல வேண்டுமென்கிறீர்களா? ஒரு ரப் எஸ்டிமேட் இது!

பாஸ்போர்ட், விசா, விமானச் செலவெல்லாம் போக, அங்கு நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கணவன் மனைவிக்கு சுமார் 70 ஆயிரம் இந்திய ரூபாய் தேவைப்படும்.

தங்குவதற்கு-20 ஆயிரம், 3 வேளை சாப்பாட்டிற்கு-20 ஆயிரம்,
சுற்றிப் பார்க்கும் செலவு-30 ஆயிரம், ஒரு பத்து நாள் டூர் செல்வதாக வைத்துக்கொண்டால், 7 லட்சம் இந்திய ரூபாய் தேவைப்படும். இது ஓர் உத்தேசமே.

பணம் உள்ளவங்க பெட்டியை ரெடி பண்ணுங்க! சந்தோஷமா சுவிஸ்ஸைச் சுற்றிப் பார்த்துட்டு வாங்க!

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க