செய்திகள் :

Travel Contest: "நீங்க தமிழ்நாடா?" - தெற்கு கர்நாடகா கோயில் தரிசன சுற்றுலா அனுபவம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கருவூலத்தில் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நண்பர் ஏற்பாடு செய்த சுற்றுலாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அனுபவம் இதோ! உங்கள் பார்வையில்...

காவிரி எக்ஸ்பிரஸ் கை நீட்டி அழைத்து எங்கள் குழுவைத் தாய் போல அணைத்துக் கொண்டது. மறுநாள் காலை மைசூர் இறங்கிக் குளித்து விட்டு அன்னை சாமுண்டீஸ்வரி தரிசனத்திற்காகச் சென்றோம்.

ஆலய நுழைவாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டோம்.

அங்கிருந்து பேட்டரி கார் பயணம். இரண்டே கார் வைத்து ஏராளமான பயணிகளை அவர்கள் சமாளித்த விதம் பாராட்டுக்குரியது. ஆனால் முதியவர்கள் சிரமப்பட்டனர். அவர்கள் நடந்தே சென்றனர்.

நீண்ட வரிசை தரிசனம். சீனியர் சிட்டிசன்களுக்குத் தனி வரிசை எனத் தகவல் அறிந்து அந்த வரிசைக்கு நுழைவாயிலில் காவலர் ஆதார் அட்டை கேட்க நான் அதைக் காண்பிக்க, 'நீங்க தமிழ்நாடா?' எனக் கேட்டு அனுமதி மறுத்தார். காரணம் எல்லாம் காவேரி நதி நீர் பிரச்னைதான். அதனால் தற்காப்பிற்காகக் கூட இருக்கலாம்.

"நான் அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று தரிசனம் செய்தேன். எங்கள் குழுவினர் முன்னே சென்று விட்டதால் இந்த பிரச்னை.

இந்த தரிசனம் முடித்து விட்டு உடுப்பி கிருஷ்ணர் தரிசனம். அடுத்த நாள் மூங்கில் காடு. மக்களின் வாழ்க்கை முறையைச் சிலைகள் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தது சிறப்பு.

அடுத்த நாள் சுப்பிரமணியர் குகே சுப்பிரமணியர் ஆலயம் என அழைக்கின்றனர்.

அந்த தரிசனம் நமது திருத்தணி தரிசனம் போல மனநிறைவு பெற்றது.

தர்மஸ்தலா ஆலயம் புத்தர் ஆலயம் நன்கு பராமரிக்கப்படுகிறது. 

புத்தர் தரிசனம் நிறைவுற்ற பின்னர் கர்நாடகாவில் உள்ள ஹலபேடு. சென்ன கேசவ ஆலயம். இந்த ஆலயம் நாம் சென்னையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது.

மஞ்சுநாதர் ஆலயம் தரிசனம் முடிந்த பின்பு இந்தியாவிலேயே பெரிய சிவன் சிலையான முருதேஸ்வரர் ஆலயம் தரிசனம். இங்கு ஈசனை இலங்கை மன்னன் இராவணன் வழிபட்ட காட்சிகள் தத்ரூபமாக வடிவமைத்து இருந்தது பாராட்டுக்குரியது.

கர்நாடக ஆலயங்கள் அனைத்திலும் மதிய உணவு பரிமாறப்படுகின்றன.

வட இந்திய ஆலயங்கள் போல இல்லாமல் கூட்டத்தைக் காவலர்கள் நெறிப்படுத்துதல் சிறப்பு. 

நான் எனக்குத் தெரிந்த தெலுங்கு, இந்தி (அரைகுறை) பேசி சமாளித்து அவர்களுடன் இணக்கமாகி சுற்றுலா இனிதே நிறைவு செய்தோம்.

- கே.அசோகன்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும் தெரியுமா?

பலரின் விருப்பமான சுற்றுலா இடம் என்றால் அது கடற்கரை தான். அலை ஓசையிலும் ஒரு விதமான அமைதியை இங்கு அனுபவிக்க முடியும். 30 நிமிடங்கள் மட்டும் தோன்றும் கடற்கரை, கருப்பு மணலை கொண்ட கடற்கரைகள் என பல தனித்து... மேலும் பார்க்க

இங்க மட்டும் எப்படி கடல் இவ்ளோ சுத்தமா இருக்கு? லட்சத்தீவு ஆச்சரியம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வேண்டாம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க