செய்திகள் :

Trump: `ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோ' - ட்ரம்ப் சொல்ல வருவது என்ன?

post image

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அந்த வீடியோ பராக் ஒபாமா, "அதிபர் சட்டத்துக்கு மேலானவர்" எனக் கூறுவதைப் போலவும், அதற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் "யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது" எனக் கூறுவதைப் போலவும் தொடங்குகிறது.

பின்னர் ஓவல் அலுவகத்திலேயே இரண்டு FBI ஏஜென்ட்கள் ஒபாமாவைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதை அதிபர் ட்ரம்ப் பார்த்து சிரிப்பதுபோல AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ வருகிறது.

இந்தப்போலி வீடியோவில் ஒபாமா கைதிகளுக்கான ஆரஞ்சு உடையுடன் கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்திருப்பதாகவும் காட்டப்படுகிறது.

இந்த வீடியோ அமெரிக்க அரசியலில் புழுதியைக் கிளப்பியிருக்கிறது. பலரும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதை அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர். அவர் 'பொறுப்பில்லாமல்' நடந்துகொள்கிறார் என விமர்சித்தனர்.

கடந்த வாரம் ஒபாமாவை, "மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர்" என ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட்

மேலும் கடந்த வாரம் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட், 2016 தேர்தலில் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்க ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாக ஒரு தியரியை உருவாக்கியதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ஒபாமாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

"டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பராக் ஒபாமா மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் 2016ம் ஆண்டு உளவுத்துறையை தங்களது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அமெரிக்க மக்களின் விருப்பத்துக்கு மாற்றான, நம் இறையாண்மையை குறை மதிப்புக்கு உள்ளாக்கும் செயல்" என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார் துளசி கபார்ட்.

கடந்த 2016ம் ஆண்டு, பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் தேசிய உளவு இயக்குநரகம் வெளியிட்ட 114 பக்க ஆவணங்கள் "ரஷ்யாவின் சைபர் முயற்சிகளால் அமெரிக்க தேர்தல் பாதிக்கப்படவில்லை" எனத் உறுதியாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது...தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Achuthanandan: கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். வயது... மேலும் பார்க்க