ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்
Trump: ``நெதன்யாகுவுக்கு 'கைது வாரண்ட்' தவறு" - சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சாடியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
இதன் பின்னர், நேற்று, "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு. அதன்மூலம், நீதிமன்றம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இந்த நீதிமன்றம் அமெரிக்கா மீதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீதும் சட்டத்திற்கு புறம்பான, அடிப்படையற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/m7zptghi/Screenshot_2025_02_07_084600.png)
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் எதாவது சொத்து இருந்தால், அது முடக்கப்படும். அவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது" என்ற உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - இரண்டு நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல.
பாலஸ்தீனம் மீது போர் தொடுத்ததற்கும், அதற்கு அமெரிக்கா உதவியதற்கு குறிப்பிட்ட அந்த வழக்கு போடப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.