தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
Trump: 'புதின் ஆசை இதுவே...' - நண்பரை பற்றி மனம் திறக்கும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் - இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உலகம் அறிந்ததே.
'நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன்' என்று தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் கூறியிருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் சம்பந்தமாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். எத்தனை முறை என்று சொல்லமாட்டேன். போர்களத்தில் பலர் இறப்பது புதினுக்கும் மிகுந்த வருத்தம் தான். இப்படி மக்கள் இறப்பதை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/rt0nn1pu/Untitled_2.jpg)
2022-ம் ஆண்டு, அமெரிக்காவின் அதிபராக நான் இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது. எனக்கும், புதினுக்கும் நல்ல உறவு இருக்கிறது.
ஜோ பைடன் நாட்டுக்கு ஓர் அவமானம் ஆவார்.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முழுமையான திட்டம் என்னிடம் உள்ளது. போர் விரைவில் நிற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைன் மிக மோசமான நிலையில் உள்ளது.
உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா உதவுவதற்கு, உக்ரைன் நாட்டில் உள்ள அரிதான கனிமங்கள் மற்றும் வாயுவை எடுப்பதற்கான 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அமெரிக்கா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று பேசியுள்ளார்.