இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு
'தவெக ஐ.டி விங்!'
தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் தோன்றி நிர்வாகிகளுக்கு முக்கிய மெசேஜை கூறியிருக்கிறார்.

'விஜய்யின் வீடியோ மெசேஜ்!'
விஜய் பேசியிருப்பதாவது, 'எல்லாருக்கும் ஹாய், இந்த மீட்டிங் நடக்கும்போதே லைவ்வா வீடியோ கால்ல வந்து பேசணும்னு நினைச்சேன். நெட்வொர்க் பிரச்னையினால அதை செய்ய முடியல. அதனாலதான் இந்த ரெக்கார்டட் மெசேஜ்.
மெய்நிகர் படை வீரர்கள்
நம்முடைய சோசியல் மீடியா படைதான் இந்தியாவிலேயே பெரிய படைன்னு சொல்றாங்க. அதை நாமலே சொல்றத விட அவங்களே பார்த்து தெரிஞ்சுக்கணும். என்னைப் பொறுத்தவரை நீங்களெல்லாம் சோசியல் மீடியால இயங்குற ரசிகர்கள் இல்லை.

மெய்நிகர் படை வீரர்கள் (Virtual Warriors) நம்முடைய ஐ.டி விங் என்றாலே கண்ணியமாக செயல்படக்கூடியவர்கள் என்ற பெயரை எடுக்க வேண்டும். விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம்.' என்றார்.