செய்திகள் :

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

post image

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவதற்கான காரணம் என்ன என பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம்
TVK, Vijay

முதலில் கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 13) விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவிருந்ததாலும், ஏற்பாடுகளை செய்வதில் சில சிக்கல்கள் இருந்ததாலும் அந்த தேதியில் விஜய்யால் கரூருக்கு செல்ல முடியாமல் போனது. திங்கள் கிழமை இல்லையென்றவுடன் அக்டோபர் 17 ஆம் தேதி, அதாவது நாளை விஜய் கரூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளையும் ஒரு டீம் களத்தில் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், நாளைய நிகழ்ச்சிக்கு இப்போது வரைக்குமே பாதிக்கப்பட்ட குடும்பத்தை தொடர்புகொண்டு விஜய் தரப்பில் பேசி ஏற்பாடுகளை செய்யவில்லை. விஜய் வீடியோ காலில் பேசிய போது தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு, இடையில் ஒரு முறை சென்று விஜய் கரூருக்கு வரும்போது உங்களை சந்திக்க விரும்புகிறார். நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம்.

TVK Vijay | த.வெ.க - விஜய்
TVK Vijay | த.வெ.க - விஜய்

நீங்கள் கண்டிப்பாக வர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வரைக்கும் விஜய் எப்போது கரூர் வருகிறார் என்கிற தேதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. இதுசம்பந்தமாக பனையூர் வட்டாரத்தில் விசாரிக்கையில்தான் விஜய் தரப்பே இன்னும் டேட்டை லாக் செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.

இதுதொடர்பாக பேசும் முக்கிய நிர்வாகிகள் சிலர், 'கரூர் சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து தலைவர் இன்னும் முழுமையாக தேறி வரவில்லை. கட்சியுமே இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. பொதுச்செயலாளர் வெளியில் வந்திருந்தாலும் கட்சியின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கவில்லை. எல்லாருமே இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறோம்.

இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என கரூர் சம்பவம் சார்ந்த பேச்சுகள்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அடுத்தக்கட்ட அரசியலை செய்ய தலைவர் தயாராக இல்லை.

TVK Vijay
TVK Vijay

நாங்களும் தலைவரை சீக்கிரமாக கரூருக்கு அழைத்து செல்ல வேண்டுமென உறுதியாக இருக்கிறோம். ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இறந்த 41 பேரில் 31 பேர்தான் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதம் 10 பேர் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று பார்ப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. துக்க வீட்டுக்கு செல்கையில் கூட்டம் கூடி ஏற்கனவே சோகத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் அசௌகரியம் ஏற்பட்டுவிடக்கூடாது.

அதற்காக ஒரு மண்டபத்தையோ உள்ளரங்கத்தையோ புக் செய்து அங்கே அத்தனை பேரையும் அழைத்து பார்க்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால், இடம் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. எங்களுக்கு இடம் கொடுத்தால் ஆளுங்கட்சியின் பகையை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அதனால்தான் குறிப்பிட்ட தேதியில் நிகழ்வை நடத்த முடியாமல் தள்ளிப்போகிறது. தீபாவளி முடிந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைவர் கரூருக்கு சென்றுவிடுவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

TVK Vijay
TVK Vijay

சம்பவம் நடந்த போதே என்ன ஆனாலும் பரவாயில்லை என கரூரிலிருந்து மக்களை சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் திமுக உள்ளே புகுந்து அரசியல் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அழைத்து வந்து ஆறுதல் கூறலாம் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைக்க விஜய்யே கொஞ்சம் குழம்பி போயிருப்பதாக சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும்... மேலும் பார்க்க

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ... மேலும் பார்க்க

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க