`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ...
TVK: தொடர்ந்து 3-வது வாரமாக அரசியல் சுற்றுப்பயணம்; நாமக்கல், கரூரில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்!
தனி விமானத்தில் புறப்பட்ட விஜய்!
விஜய் இன்று காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு விஜய் புறப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார்.
காலையில் நாமக்கல், பிற்பகலில் கரூர்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரை மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் முதல் மாவட்டமாக செப்டம்பர் 13-ம் தேதி திருச்சி சென்ற விஜய், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றார்.
கடைசியாகத் திருவாரூரில் பேசுகையில், வறுமை இல்லாத, குடும்ப ஆதிக்கமில்லாத, ஊழலில்லாத தமிழகம்தான் தனது தொலைநோக்குப் பார்வை என்று விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
த.வெ.க-வின் அறிக்கையின்படி நாமக்கல்லில் காலை 8.45 மணியளவில் கே.எஸ்.திரையரங்கம் அருகிலும், கரூரில் பிற்பகல் 12 மணியளவில் வேலுச்சாமிபுரத்திலும் பிரசாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.