செய்திகள் :

Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' - சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?

post image
முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.

சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் வரத் தொடங்கினர். உதித் நாராயணனின் பாடலை ரசித்துக் கொண்டே மேடையின் அருகே புகைப்படங்கள் எடுப்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுக்கு புகைப்படத்தைக் கொடுத்ததோடு அவர்கள் அனைவருக்கும் உதித் நாராயணன் முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. அந்தக் காணொளியை பதிவிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாக உதித் நாராயணனே வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர், `` நான் என்னையோ எனது குடும்பத்தையோ அல்லது எனது நாட்டையோ அவமானப்படுத்தும் செயலையும் செய்திருக்கிறேனா? நான் எல்லாவற்றையும் அடைந்திருக்கும் இந்த வாழ்க்கை கட்டத்தில் ஏன் அப்படி ஏதாவது செய்ய வேண்டும்? உலகெங்கிலும் உள்ள மக்கள் எனது கான்சர்டுக்கு வந்து நிற்கிறார்கள். டிக்கெட்டுகள் மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. எனது ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே ஆழமான, தூய்மையான மற்றும் உடைக்க முடியாத பிணைப்பு உள்ளது.

Udit Narayanan

அந்த களங்கமான வீடியோவில் நீங்கள் கண்டது எனது ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே உள்ள அன்பின் வெளிப்பாடு தான். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், நான் அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இது ஏதும் அசிங்கமான அல்லது ரகசியமான ஒன்று அல்ல. இது பொது மக்களுக்கு தெரிந்த ஒன்று. என் இதயம் தூய்மையானது. தூய அன்பின் ஒரு செயலில் அசிங்கமான ஒன்றை சிலர் பார்க்க விரும்பினால், நான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். மேலும், நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால், இப்போது அவர்கள் என்னை ஏற்கனவே இருந்ததை விட இன்னும் பிரபலமாக்கியுள்ளார்கள்." எனக் கூறியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Shah Rukh Khan: "உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்..." - தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான்

துபாயில் நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், "எனக்குத் தென்னிந்தியாவில் நிறை... மேலும் பார்க்க

``சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால்..'' -ரசிகரின் வேண்டுதல், அமீஷா பட்டேல் பதில்!

பாலிவுட்டில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகராக இருப்பது சல்மான் கான் மட்டுமே. நடிகைகளில் அமீஷா பட்டேல், தபு, கங்கனா ரனாவத் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடிகர்களில் சல்மான் கான் போன்ற ஒ... மேலும் பார்க்க

SRK: இடித்துக் கட்டப்படவுள்ள ஷாருக்கான் வீடு; போட்டிப் போடும் பில்டர்கள்; காரணம் என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ராவில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவில்தான் அவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடற்கரை அருகில் இருக்கும் இப்பங்களாவைக் காண தினமும் நூற்ற... மேலும் பார்க்க

SRK: நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறா? அரசிடம் பணத்தைத் திரும்பக் கேட்கும் ஷாருக்; என்ன நடந்தது?

நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடியாகும். ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கெளரி கான் பெயரிலுள்ள இப்பங்களா இர... மேலும் பார்க்க

Bollywood Threat mail: பாலிவுட் பிரபலங்களுக்கு வரும் கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள்! - போலீஸ் விசாரணை

சமீப காலமாகவே பாலிவுட் பிரபலங்களுக்குத் துப்பாக்கிச்சூடு மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் போன்றவை வந்த வண்ணமிருக்கின்றன.குறிப்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியத... மேலும் பார்க்க

Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமா... மேலும் பார்க்க