14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக: ஜெ.பி. நட்டா
UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?
தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.
என்ன போராட்டம்?
நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
இந்தப் போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.
குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான குரல்கள் இந்தப் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தன.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 1,000-க்கும் மேற்பட்ட காவல்படை களமிறக்கப்பட்டது. இருந்தும், ஆங்காங்கே வன்முறைகள் வெடித்திருக்கின்றன. அதில் காவலர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க்
இந்தப் போராட்டத்தினரிடம் ஆன்லைனில் பேசிய உலகில் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தற்போது பிரிட்டனின் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதை எதிர்த்துதான் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
சமீபத்தில், இதே மாதிரியான போராட்டம் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் போன்றவை எழுந்து வருகின்றன.