செய்திகள் :

Union Budget 2025 : பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய `10' விஷயங்கள் - Quick read

post image
2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.

இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது மத்திய பட்ஜெட்டாகும். இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களாக பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு உள்ளிட்ட  5 அம்சங்களில் கவனம் செலுத்தி பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.

Union Budget 2025

1. ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி கிடையாது. கூடுதலாக ரூ.75,000 கழிவு கிடைக்கும். ஆக மொத்தம் ரூ.12.75 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது.

2. மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு வரி கிடையாது. மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்துக்கு வழங்கப்படும் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பு 1 லட்சம் ரூபாயாக உயர்வு.

3. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையம் ரூ.500 கோடியில் ஏற்படுத்தப்படும்.

4. பட்டியலின பெண்கள் சுய தொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்க சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5. மாணவர்களுக்கு பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்கத் திட்டம். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

6. மின்சார வாகனங்கள் மற்றும் கைபேசிகளுக்கு வரியில் சலுகை அறிவிப்பு. லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரிகளிலிருந்து முழுமையாக விலக்கு.

Budget 2025

7. கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி; கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.

8. அடுத்த ஐந்து வருடங்களில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.

9. விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும். 

10. 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கத் திட்டம். புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி.

Union Budget 2025: ``நாங்கள் சொல்லும்போது நம்பாதவர்கள் இப்போது?" - விமர்சிக்கும் பா.சிதம்பரம்

2025 - 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட... மேலும் பார்க்க

Union Budget 2025 : ``1 கோடி மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!'' - நிர்மலா சீதாராமன்

பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025- 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமன் : மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் குறித்து தெரியுமா?

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவை அடுத்து நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.இவர் 2025க்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது அவரது 8-வது பட்ஜெட்டாகும்.Nirmala Si... மேலும் பார்க்க

Budget 2025 Live : இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்... பிப்ரவரி 1-ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்... மேலும் பார்க்க

Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முதல் பட்ஜெட் தெரியுமா?

இந்தியாவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். யார... மேலும் பார்க்க